தொல்காப்பியர் மொழியை அதாவது சொல்லை புணர்நிலைக் கோணத்தில் மூன்று வகையாக 'மொழிமரபு' இயலில் பாகுபடுத்திக் காட்டுகிறார். அவை: 1.ஓரெழுத்தொருமொழி, 2.ஈரெழுத்தொருமொழி, 3. இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி என்பன.

ஓரெழுத்தொருமொழியும், ஈரெழுத்தொருமொழியும் இரண்டு மாத்திரை அளவில் மிகாதவை. இரண்டு மாத்திரையைக் காட்டிலும் மிகுந்த ஒலி கொண்டவை தொடர்மொழி. அதாவது இரண்டு-மாத்திரையை இறந்து இசைப்பவை.

ம்-ன் மயங்கும் தொடர்மொழி தொகு

நிலம் - நிலன், பிலம் - பிலன், கலம் - கலன், வலம் - வலன், உலம் - உலன், குலம் - குலன், கலம் - கடன், பொலம் - பொலன், புலம் - புலன், கலம் - கலன், நலம் - நலன், குளம் - குளன் -- என இத் தொடக்கத்தன. (இவை நச்சினார்க்கினியார் எடுத்துக்காட்டுகள்.

எப்போது மயங்கும் தொகு

இதனைத் தொல்காப்பியரோ, தொல்காப்பிய உரையாசிரியர்களோ விளக்கவில்லை. என்றாலும் இலக்கிய ஆட்சிகளை நோக்கும்போது மயங்கம் எதனால் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. கீழ் வரும் ஆட்சிகளைப் பாருங்கள். தெளிவாகப் புரிந்தவிடும்.
அறம் பூண்டார் - திருக்குறள் 23
அறம் பெருகும் - திருக்குறள் 96
அறம் பார்க்கும் - திருக்குறள் 130
அறம் பொருள் கண்டார் - திருக்குறள் 141
அறம் கூறான் - திருக்குறள் 181
அறம் கூறும் - திருக்குறள் 183 - இப்படிப் பல
அனைத்தறன் ஆகுல நீர பிற - திருக்குறள் 34
அறனே - திருக்குறள் 39
அன்பும் அறனும் உடைத்தாயின் - திருக்குறள் 45
அறன் இழுக்கா இல்வாழ்க்கை - திருக்குறள் 48
அறன் எனப்பட்டதே - திருக்குறள் 49 - இப்படிப் பல
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் - திருக்குறள் 142 (இதில் பிறன் என்னும் சொல் மயங்காதாகையால் எதுகைக்காக 'அறங்கடை' என்பது 'அறன்கடை' எனத் திரிந்து நின்றது.)
அறன்வலியுறுத்தல் - திருக்குறள் அதிகாரம் 4 (இதில் 'வ' எழுத்து அரையுயிர்)

விதி தொகு

இந்த ஆட்சிகள் உயிரெழுத்து ஒன்றும்போது 'ன்' என்றும், மெய்யோடு அதாவது உயிர்மெய்யோடு ஒன்றும்போது 'ம்' என்றும் மயங்கும் என்னும் தமிழ்மரபினை உணர்த்துகின்றன.

ஏனைய மொழிகளுக்கும் இந்த விதி பொருந்துவதைச் சங்கநூல் ஆட்சிகளில் உணர்த்துகொள்ளலாம்.

ம்-ன் மயங்காத் தொடர்மொழி ஒன்பது தொகு

  • இளம்பூரணர் எடுத்துக்காட்டு
அழன், உகின், கடான், குயின், செகின், பயின், புழன், வயான், விழன்,
  • நச்சினார்க்கினியார் விளக்கம்
அழன், எகின், கடான், குயின், செகின், பயின், புழன், வயான், விழன்,
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்மொழி&oldid=767830" இலிருந்து மீள்விக்கப்பட்டது