தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பு மின்வழிகள்

தொடர் இணைப்பு மின்வழிகள்  தொகு

ஒவ்வொரு மின்னுறுப்புக்கும் இரண்டு முனைகள் உண்டு. ஒரு முனையைத் தலை அல்லது தொடக்கம் என்றும், மறுமுனையை வால் அல்லது முடிவு என்றும் கூறுவர். இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மின்னுறுப்புகளைத் தொடர்பாக இணைக்க வேண்டுமாயின் முதலுறுப்பின் வாலை இரண்டாம் உறுப்பின் தலையுடனும், இரண்டாம் உறுப்பின் வாலை மூன்றாம் உறுப்பின் தலையுடனும் இணைத்தல் வேண்டும். இப்போது இம்மூன்று உறுப்புகளும் ஒரு தலையும் ஒரு வாலும் கொண்ட ஒரே உறுப்பு போலவே தோன்றும். இத்தொடர் இணைப்பின் தலை முனையை மின்னூற்றின் நேர்முனையுடனும் இத்தொடர் இணைப்பின் வால் முனையை மின்னூற்றின் எதிர்முனையுடனும் இணைத்து விடுவோமாயின் ஒரு தொடர் இணைப்பு மின்வழி கிடைக்கும்.[1]

பக்க இணைப்பு மின்வழிகள்  தொகு

இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மின்தடைகளைப் பக்க இணைப்பில் இணைக்க வேண்டுமாயின், எல்லாத் தடைகளின் தலைகளும் எல்லா தடைகளின் வால்களும் ஒன்றாகவும் இணைக்கப்பட வேண்டும். எல்லா மின்தடைகளும் ஒரே தலையும் ஒரே வாலும் கொண்ட ஒரு மின்தடை போலவே தோன்றும். இப்பக்க இணைப்பின் தலை முனையை மின்னூற்றின் நேர்முனையுடனும் இப்பக்க இணைப்பின் வால் முனையை மின்னூற்றின் எதிர்முனையுடனும் இணைத்து விடுவோமாயின் ஒரு பக்க இணைப்பு மின்வழி கிடைக்கும்.[1]

உசாத்துணைகள் தொகு

  1. 1.0 1.1 அடிப்படை மின்னியல் - பேரா. இரா. கணேசன்