தொடுதலில்லா விசைகள்

செயல்படும் ஒரு பொருளின்மீது எந்தவிதமான தொடுதலுமின்றிச் செயல்படும் விசையானது தொடுதலில்லா விசை (non-contact force) எனப்படும்.[1] அதாவது, இடைவினை புரியும் இரு பொருள்கள், ஒன்றுடன் ஒன்று தொடாமலேயே, ஒன்றையொன்று இழுக்கக்கூடிய அல்லது தள்ளக்கூடிய விசைகள் தொடுதலில்லா விசைகள் எனப்படும். இவ்விசைக்கு மாறானது, ஒரு பொருளைத் தொட்டு, அதன்மீது செயல்படும் விசையானது "தொடு விசை"யாகும்.[1]

இரு காந்தங்களுக்கு இடையேயான தொடுதலில்லா விசை

ஒரு பொருளின் எடையைத் தீர்மானிக்கும் ஈர்ப்பு விசையானது, மிகவும் நன்கறியப்பட்ட தொடுதலில்லா விசைகளுள் ஒன்றாகும்.[1] கீழ்வரும் நன்கறியப்பட்ட நான்கு அடிப்படை விசைகளும் தொடுதலில்லாவிசைகளாகும்:[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Rusty L. Myers (2006). The Basics of Physics. Greenwood Publishing Group. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313328579.
  2. Jon A. Celesia (1997). Preparation for Introductory College Physics: A Guided Student Primer. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780314209337.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடுதலில்லா_விசைகள்&oldid=3962762" இலிருந்து மீள்விக்கப்பட்டது