தொடு வட்டங்கள்

வடிவவியலில் தொடு வட்டங்கள் (tangent circles, kissing circles) என்பவை பொதுவான தளத்திலமைந்து ஒரேயொரு புள்ளியில் சந்திக்கும் வட்டங்களாகும். இவை உட்தொடு அல்லது வெளித்தொடு வட்டங்களாக அமையலாம்.

இரு வட்டங்கள்

தொகு
 
வெட்டிக்கொள்ளும் இருவட்டங்களின் தொடுவட்டங்களின் மையங்களின் இயங்குவரைகளாகப் பெறப்படும் நீள்வட்டமும் அதிபரவளைவும்.

இரு வட்டங்கள் ஒன்றுக்கொன்று வெளித்தொடு வட்டங்களாக இருந்தால் அவற்றின் மையங்களுக்கு இடைப்பட்ட தூரமானது ஆரங்களின் கூடுதலுக்குச் சமமாகவும், உட்தொடு வட்டங்களாக இருந்தால் மையங்களுக்கு இடைப்பட்ட தூரமானது ஆரங்களின் வித்தியாசத்திற்குச் சமமாகவும் இருக்கும்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடு_வட்டங்கள்&oldid=3454195" இலிருந்து மீள்விக்கப்பட்டது