தொடு விளையாட்டு

தொடு விளையாட்டு என்பது சிறுவர் சிறுமியர் ஓடியும், நொண்டியும், கண்ணைக் கட்டிக்கொண்டும் பல விதிகள் வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தொட்டு விளையாடும் விளையாட்டு. இதில் பல வகைகள் உண்டு.

கால் கவட்டிக்குள் கைவிட்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றால் தொடக்கூடாது
கல்லில் கம்பு ஊன்றிநின்றால் தொடக்கூடாது
வட்டத்துக்குள் ஓடும்போது தொடுதல்
பெரிய வட்டத்துக்குள் ஓடித் தொடுதல்
சிறிய வட்டத்துக்குள் நொண்டி அடித்துக்கொண்டு ஓடித் தொடுதல்
கண்ணைக் கட்டிக்கொண்டு தொடுதல்
கட்டக் கோட்டில் ஓடிக்கொண்டு தொடுதல்
ஆள்-வேலியை அறுத்துக்கொண்டு தொடுதல்
முறை வைத்துக்கொண்டு தொடுதல்
உட்கார்ந்திருக்கும்போது தொடக்கூடாது
கும்பிட்டு நிற்பவரைத் தொடக்கூடாது
கால் கவட்டிக்குள் கையை விட்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது.
தூணைப் பற்றி நிற்போரைத் தொடக்கூடாது.
இருவர் பற்றி நிற்கும்போது தொடக்கூடாது.
கையால் மண்ணைத் தொட்டுக்கொண்டு நிற்கும்போது தொடக்கூடாது.
கல்லில் கால் ஊன்றிக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது.
கல்லில் கம்பு ஊன்றிக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது.
நிழலில் நிற்பவரைத் தொடக்கூடாது.

என்றெல்லாம் முறை வைத்துக்கொண்டு தொட்டு விளையாடுதல் ஒரு வகை.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

கருவிநூல்

தொகு
  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடு_விளையாட்டு&oldid=1036058" இலிருந்து மீள்விக்கப்பட்டது