தொட்டண்ணா (Doddanna) (பிறப்பு: நவம்பர் 11, 1949) இவர் கன்னட திரையுலகில் ஓர் இந்திய நடிகராவார். இவர் சுமார் 800 படங்களில் நடித்துள்ளார். நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நேரத்தில், கன்னடத் திரைத்துறையில் ஒரு கதாபாத்திர நடிகராக நுழைந்தார்.

தொட்டண்ணா
பிறப்பு11 நவம்பர் 1949 (1949-11-11) (அகவை 74)
அரசிகரே, ஹாசன் மாவட்டம், மைழூர் மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1981 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சாந்தா

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தொட்டண்ணா 11 நவம்பர் 1949 இல் பிறந்தார். குடும்பத்தில் இளைய மகனான இவர் மடிவாலா சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தொட்டப்பாவின் பெயரிடப்பட்டது. பத்ராவதியில் விக்னேசுவரா கலா சங்கத்துடன் நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த நேரத்தில் இவர் அங்கிருந்த எஃகு தொழிற்சாலையில் பணிபுரிந்தார். இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கந்தர்வ ரங்கா என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். பின்னர், கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

தொழில் தொகு

இவர் ஒரு பல்துறை நடிகராகத் திகழ்ந்தார். இவர் வில்லன்கள், காவலர்கள் மற்றும் பிற கதாபாத்திரங்களை சித்தரித்துள்ளார். குறிப்பாக, இவர் ஒரு நகைச்சுவை நடிகராக வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டண்ணா&oldid=3505926" இலிருந்து மீள்விக்கப்பட்டது