தொனால்டு ரே விஃப்

அமெரிக்க இயற்பியலாளர்

தொனால்டு ரே விஃப் (Donald Ray Wiff) அமெரிக்காவைச் சேர்ந்த ஒர் இயற்பியலாளராவார். ஓகையோ மாநிலத்திலுள்ள கெண்ட்டு மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர் அமெரிக்க இயற்பியல் கழகத்தில் உறுப்பினர் தகுதியைப் பெற்றார். [1] [2] 1999 ஆம் ஆண்டில் தொழில்துறை மற்றும் பயன்பாட்டு இயற்பியல் தொடர்பான மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட காரணத்தால் [3] தொனால்டுவிற்கு இத்தகுதி கிடைத்தது. பலபடி மூலக்கூற்று எடையில் கணித ரீதியாக சரியான அமைவற்ற சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் எந்திரவியல் தளர்வு நேரப் பகிர்வு செயல்பாடுகள் மற்றும் மூலக்கூறுகள் உள்ளிட்ட பலபடி தொடர்பான ஆய்வுகளை இவர் மேற்கொண்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "APS Fellowship". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  2. "APS Fellow Archive". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.
  3. "APS Fellows 1999". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொனால்டு_ரே_விஃப்&oldid=3187166" இலிருந்து மீள்விக்கப்பட்டது