தொன்னை
தொன்னை என்பது இலையினால் செய்யப்படும் உணவுக் கலன். பனை ஓலை, தென்னை ஓலை, வாழை இலை, பூவசர இலை ஆகியவற்றிலும் தொன்னை செய்யப்படும். உழவர்கள் உணவு உண்ணவும், கோயில்களில் பிரசாதம் வழங்கவும் தொன்னை பயன்படுகிறது. தாமரை இலையில் செய்த தொன்னையில் பூக்களைக் கட்டி விற்பர். தொன்னை தட்டை வடிவிலோ, கிண்ண வடிவிலோ இருக்கும். ஈர்க்குச்சிகளைக் கொண்டு, இலைகளைச் சேர்த்து தைப்பர்.
‘தொன்னைக்கு நெய் ஆதாரமா.. நெய்க்கு தொன்னை ஆதாரமா? ’ என்று ஒரு சொல்வழக்கு உண்டு.
இலக்கியத்தில் தொன்னை
தொகுபாரதிதாசன் தனது உலக ஒற்றுமை என்னும் பாடலில் “தனது நாட்டுச் சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்துவோரின் உள்ளம் தொன்னை உள்ளம்” என்று கூறுகிறார்.
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச் சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல்![1]
- ↑ உலகஒற்றுமை -பாரதிதாசன்