தொன்மை (நூல்வனப்பு)

தொன்மை என்பது நூலின் வனப்பு இயல்புகள் எட்டில் ஒன்று. [1]

கதை உரை இயைந்து வருவது தொன்மை வனப்பியல் என்பது இளம்பூரணர் கருத்து. இந்தத் தொன்மை

  1. இராம-சரிதம்,
  2. பாண்டவ-சரிதம்

முதலானவற்றின்மேல் வரும் செய்யுள் என்று இவர் குறிப்பிடுகிறார்.

  1. பெருந்தேவனாரால் பாடப்பட்ட பாரதம்,
  2. தகடூர் யாத்திரை

போல்வன தொன்மை என்பது பேராசிரியர் கருத்து.

  1. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக வரும் சிலப்பதிகாரம்

தொன்மை-வனப்பு கொண்ட நூல் என்பது நச்சினார்க்கினியர் கருத்து.

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. தொன்மை தானே சொல்லுங் காலை
    உரையொடு புணர்ந்த பழமை மேற்றே – தொல்காப்பியம், செய்யுளியல் 229
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்மை_(நூல்வனப்பு)&oldid=3305015" இலிருந்து மீள்விக்கப்பட்டது