தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை

தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை என்பது தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டையில் உள்ள ஓரு மேல்நிலைப் பள்ளியாகும். இப்பள்ளியானது கிராமப்புற மாணவர்களின் எழுத்தறிவின்மையை போக்கவும் தரமான கல்வியை அளிக்கும் நோக்கத்துடனும் 1964 ஆம் ஆண்டு சலேசியன்சபையினரால் (Salesians of Don bosco) தொடங்கப்பட்டது. இப்பள்ளியானது உமது ஒளி ஒளிர்வதாக (Let your light shines) என்ற பொன் மொழியினை தாரகமந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இது தரமான கட்டடம், நூலகம், பரந்த விளையாட்டு மைதானம், தொழில்நுட்ப வசதிகள் போன்றவற்றை கொண்டுள்ளது. நெறிமுறை கல்வி மற்றும் மதிப்பு கல்வி (Ethical and Values) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் இப்பள்ளியானது 2014 ம் ஆ‌ண்டு தனது பொன்விழா கொண்டாட்டத்தை நிறைவு செய்தது. இங்கு புனித தொன் போஸ்கோ அவர்களால் அன்று இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட செபகூடம் என்று அழைக்கப்படும் ஆரட்டரி (oratory ) இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது ஆகும் [1] [2]

மேற்கோள்கள்

தொகு