தொல்காப்பியத்தில் விலங்கினம்

தொல்காப்பியம் மரபியல் பகுதியில் விலங்கினங்களில் பலவற்றின் இளமைப்பெயர்கள், ஆண்-பெயர்கள், பெண்-பெயர்கள் மரபுவழியில் எவ்வாறு பயிலப்பட்டுவந்தன என்பது சுட்டப்படுகிறது. அவற்றின் பெயர்கள் அகரவரிசையில் தொகுக்கப்பட்டு இங்குத் தரப்படுகின்றன.

இடையில் தொல்காப்பியர் தந்துள்ள சில குறிப்புகளும் உள்ளன.

விலங்கின இளமைப்பெயர் விலங்கின ஆண்-பெயர் விலங்கினப் பெண்-பெயர்
  • தவழ்வனவற்றிற்கு – பார்ப்பு, பிள்ளை
  • பறப்பனவற்றிற்கு – பார்ப்பு, பிள்ளை
  • அணில் குட்டி, அணில் பறழ்
  • ஆன் கன்று, ஆன் குழவி
  • உழை மறி
  • ஊகக் குழவி
  • எருமைக் கன்று, எருமைக் குழவி
  • எலிக் குட்டி, எலிப் பறழ்
  • ஒட்டகக் கன்று
  • கடமைக் கன்று, கடமைக் குழவி
  • கராம் கன்று
  • கவரிக் கன்று
  • கழுதைக் கன்று
  • குஞ்சரக் குழவி,
  • குதிரை மறி, குதிரைக் கன்று
  • குரங்குக் குட்டி, குரங்கு மகவு, குரங்குப் பிள்ளை, குரங்குப் பறழ், குரங்குப் பார்ப்பு, குரங்குக் குழவி
  • நரிக் குருளை, நரிக் குட்டி, நரிப் பறழ், நரிப் பிள்ளை
  • நவ்வி மறி
  • நாய்க் குருளை, நாய்க் குட்டி, நாய்ப் பறழ்
  • பன்றிக் குருளை, பன்றிக் குட்டி, பன்றிப் பறழ், பன்றிப் பிள்ளை
  • புல்வாய் மறி
  • புலிக் குருளை, புலிக் குட்டி, புலிப் பறழ், புலிப் பிள்ளை
  • மக்கட் குழவி, மக்கள் மகவு
  • மரைக் கன்று, மரைக் குழவி
  • முசுக் குழவி
  • முயல் குருளை, முயல் குட்டி, முயல் பறழ், முயல் பிள்ளை
  • மூங்காக் குட்டி, மூங்காப் பறழ்
  • யாட்டு மறி
  • யானைக் கன்று,
  • வெருகுக் குட்டி, வெருகுப் பறழ்
  1. ஆட்டு அப்பர், ஆட்டு உதள், ஆட்டு மோத்தை, ஆட்டுத் தகர்
  2. உழை ஏறு, உழை ஒருத்தல், உழைக் கலை
  3. எருமை ஏறு, எருமை ஒருத்தல், எருமைக் கண்டி, எருமைப் போத்து,
  4. எழால் போத்து, (எழால் = பருந்து),
  5. கவரி ஏறு, கவரி ஒருத்தல்
  6. குதிரைச் சேவல்
  7. குரங்குக் கடுவன்
  8. சுறா ஏறு
  9. பன்றி ஏறு, பன்றி ஒருத்தல், பன்றிக் களிறு
  10. புல்வாய் இரலை, புல்வாய் ஏறு, புல்வாய் ஒருத்தல், புல்வாய்க் கலை, புல்வாய்ப் போத்து,
  11. புலி ஒருத்தல், புலிப் போத்து,
  12. புள்ளினச் சேவல் (மயில் நீங்கலாக)
  13. பெற்ற ஏறு, பெற்றப் போத்து,
  14. மயில் போத்து,
  15. மரை ஏறு, மரை ஒருத்தல், மரைப் போத்து,
  16. முசுவின் கலை
  17. முதலைப் போத்து
  18. யானைக் களிறு
  1. அன்னப்பெடை, அன்னப்பேடை
  2. ஆட்டு மூடு, ஆட்டுக் கடமை
  3. உழைப் பிணை
  4. ஊக மந்தி
  5. எருமை ஆ, எருமை நாகு
  6. ஒட்டகப் பெட்டை
  7. கவரிப் பிணை
  8. கழுதைப் பெட்டை
  9. குதிரைப் பெட்டை
  10. குயில்பெடை, குயில்பேடை,
  11. குரங்கு மந்தி,
  12. கூகை அளகு,
  13. கோழி அளகு, கோழிப் பெட்டை
  14. நந்து நாகு
  15. நரிப் பாட்டி
  16. நவ்விப் பிணை
  17. நாய்ப் பாட்டி, நாய்ப் பிணவல், நாய்ப் பிணவு
  18. பன்றிப் பாட்டி, பன்றிப் பிணவல், பன்றிப் பிணவு
  19. புல்வாய்ப் பிணவல், புல்வாய்ப் பிணவு, புல்வாய்ப் பிணை
  20. புள்ளினப் பெட்டை, புள்ளினப் பெடை
  21. பெற்றத்தின் ஆ, பெற்றத்தின் நாகு
  22. மக்கள் பிணா, மக்களில் பெண்
  23. மயில் அளகு, மயில் பெட்டை,
  24. மரை ஆ (மரையா), மரை நாகு, மரைப் பெட்டை
  25. முசு மந்தி,
  26. யானைப் பிடி