தொல்காப்பியம் பொருளியல் செய்திகள்

பொருளியல் என்பது தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் ஐந்தாவதாக வரும் ஓர் இயல். இதற்கு முன் சொல்லப்பட்ட நான்கு இயல்களுக்கும், பின் சொல்லப்போகும் நான்கு இயல்களுக்கும் பொதுவான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன. பாட்டின் உட்பொருளை இவ்வாறு உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கங்களும் இதில் உள்ளன. இதனை ஒழிபியல் என்று எடுத்துக்கொண்டாலும் பொருந்தும் என்று இளம்பூரணர் தெரிவிக்கிறார்.

செய்திகள் தொகு

தொகுப்பு 1 தொகு

  • பொருள் உரைக்கும்போது பாடலில் உள்ள சொல்லிசைவைப் பிரித்துச் சொன்னாலும் பொருளிசைவு பிரியாதிருக்க வேண்டும்.[1] கொண்டுகூட்டிச் சொல்லலாம்.
  • நோயும் இன்பமும் வாழ்வில் வரும். எட்டு வகை மெய்ப்பாடுகளால் அவை வெளிப்படும். அப்போது பிறவும், பிறரும் தம்மைப்போல் உறுப்பும், நினைவும், செயல்பாடும் உடையனவாகக் கருதி அவற்றோடு உள்ளத்தாலும், மொழியாலும் பேசுதல் உண்டு.[2][3]
  • கனவிலும் இச்செயல்கள் நிகழும் [4]
  • அகத்திணை மாந்தர்களில் மகளை அவளது காதலனுடன் அனுப்பிவைத்த காலத்தில் தாய்க்கும் இவை நிகழும்.[5]
  • அகத்திணை மாந்தர்களில் தலைவி, தோழி, நற்றாய், செவிலி ஆகிய நால்வரும் பாலால் (பிறப்பால்) கெழுமியவர்கள் (இணைந்தவர்கள்) இவர்களுக்கும் இவை நிகழும். நண்பர்களுக்கு இப்படிப்பட்ட உணர்வுகள் வருவதில்லை.[6] இவர்கள் நால்வரிடமும் ஒத்த உயிரோட்டம், நாணம், மடம் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை ஆகியன இருக்கும்.[7] அப்போது பொருள்கள் தம்மை உணர்ந்துகொண்டது போலப் பேசுவார்கள்.[8][9]
  • தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் உடம்பும் உயிரும் வாடினாலும் அவற்றைப் பழித்தல் அல்லது தலைவி தலைவன் இருக்குமிடத்துக்குச் செல்லமாட்டாள்.[10][11] தனிப்பட்ட நெஞ்சழுத்தத்தால் தலைவனிடம் செல்லுதலும் உண்டு.[12] உள்ளதை மறைத்தல், அவனை வேட்டல் ஆகியவை தலைவியின் மடம்.[13] தோழி தலைவியின் உறவை அறத்தொடு நிற்கும் காலத்தில்தான் செவிலிக்கும் தாய்க்கும் வெளிப்படுத்துவாள்.[14]
  • எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு, தலைப்பாடு ஆகிய ஏழு காலநிலைகளில் தோழி உண்மையை உரைக்கும் அறத்தொடுநிலை நிகழும்.[15] துன்பம் வந்தபோது அறத்தொடுநிலை சொல்லால் வெளிப்படுத்தப்படும்.[16]
  • செறிவு, நிறைவு, செம்மை, செப்பல், அறிவு, அருமை என்னும் (ஆறு) பாங்குகள் பெண்பாலார்க்கு உரியவை.[17]
  • உறவுக்கு இடையூறாக இருக்கும் காலம், அவன் வரும் வழி, தான் காப்பு செய்யப்பட்டிருக்கும் நிலை ஆகியவற்றில் குற்றம் சொல்லல், தன்னைத்தானே நொந்துகொள்ளுதல், அவனுக்குத் துன்பம் நேருமோ என அஞ்சுதல், இரவில் வருபவனைப் பகலில் வா என்றும், பகலில் வருபவனை இரவில் வா என்றும் சொல்லித் தட்டிக் கழித்தல், அவனை இனி வராதே எனக் கூறுதல், நன்மை தீமைகளை மாற்றிப் பேசுதல், போன்றவை தலைவனைத் திருமணம் செய்துகொள்ள விரும்புதலை வெளிப்படுத்தும் பேச்சுகள்.[18] எனக்கு ஆசை எனக் கூறுவதும் அது.[19] உண்ணாப் பொருளை உண்டன போலப் பேசுவதுண்டு.[20][21]
  • தலைவன் யானை, குதிரை, தேர் முதலானவற்றில் ஏறியும் வருவான்.[22] தலைவி காப்புச்சிறையில் இருக்கும்போது தலைவன் தனக்குப் பழி நேரும் என்றாலும் அன்பு, அறம், இன்பம், நாண் ஆகியவற்றைக் கைவிட்டுவிடுவான்.[23] தலைவி உடன் வருதாகச் சொல்லும்போது தான் செல்லும் பாலைநில வழியைப்பற்றிப் பேசுவான்.[24]

தொகுப்பு 2 தொகு

  • வழக்கம் என்பது உயர்ந்தோர் நெறி.[25] பொருளுக்காகத் தலைவியுடன் வாழவேண்டிய அறத்தைத் துறத்தலும் ஒரு வாழ்க்கைநெறி. இது பழிக்கப்படும்.[26] பிரியினும் தலைவன் பழிக்காக நாணுதலைக் கைவிடக் கூடாது.[27]
  • தந்தை, தம்பி, தம்முன் அண்ணன் போன்ற முறைப்பெயர்கள் அகத்திணையில் வரும்.[28] நான், நீ, எம் என அகத்திணையில் வருவன உரிமைப்பொருளை உணர்த்தும்.[29] பால் மயங்கிய சொற்களும் அகத்திணையில் வரும்.[30]
  • இன்பம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொது.[31] பரத்தையிடம் செல்லல் நானிலத்தாருக்கும் உரியது.[32] நான்கு வருணத்தாருக்கும் உரியது என்பது இளம்பூரணர் உரை. தன் மகனை எண்ணியும், தன் கணவனை ஊர் தூற்றும் என எண்ணியும் தலைவி தன் தலைவனின் பரத்தைமையை வெளிப்படுத்த மாட்டாள்.[33] தன் வருத்தம் மிகும்போது வெளியில் சொல்வதும் உண்டு.[34] மனைவி உயர்வும், கணவன் அவளைப் பணிதலும் ஊடல் காலத்தில் நிகழும்.[35] கணவன் மனைவியைப் பலவாறாகப் புகழ்வான்.[36]

தொகுப்பு 3 தொகு

  • இறைச்சிப் பொருளால் பொருள் உய்த்துணரப்படும் [37]
  • பொருளீட்டவும், போருக்கும் தலைவன் பிரிவானே எனத் தலைவி அஞ்சுவாள்.[38]
  • தலைவி பரத்தையைப் புகழ்ந்தாலும் அது ஊடல்தான்.[39] இந்தப் புகழ்ச்சி தலைவனின் உள்ளக் கிடக்கையை உணர்வதற்காகத்தான்.[40]
  • மகிழ்ச்சியிலும், ஊடலிலும் தலைவனும் தலைவியும் பிதற்றுவர்.[41]
  • இன்ன காலத்தில் வருவேன் என்று சொன்னவர் வரவில்லையே எனத் தலைவி மடம், வருத்தம், மருட்கை, மிகுந்த கற்பனை ஆகிய நான்கு நிலைகளில் பிதற்றுவாள்.[42]
  • தலைவன் தலைவியிடம் கெஞ்சும்போது தோழி இருவருக்கும் அறிவுரை கூறுவாள்.[43]
  • தன்னை உயர்த்திப் பேசுதல், தலைவியோடு எப்பிட்டுப் பேசுதல், ஐயுறப் பேசுதல் மூன்றும் ஆண்மகன் செயல்.[44] இதற்குத் தோழி ஒத்தூதுவாள்.[45] தலைவி தன்னை உயர்த்திப் பேசதலும் உண்டு.[46] வாயில்கள் வெளிப்படையாகப் பேசுவர்.[47]

தொகுப்பு 4 தொகு

  • பாட்டின் பொருளை உணர்ந்துகொள்ள ஐந்து வகையான உள்ளுறை உவமம் பயன்படும்.[48] இது எல்லையில்லாத இன்பத்தைக் காட்டும்.[49] மங்கல மொழி, அவையல் கிளவி, மாறில் ஆண்மை என்பனவும் உள்ளுறை உவமைகளே.[50]
  • தனக்கு முறைமை இல்லாதவளை அன்னை என்றலும், தனக்கு முறைமை இல்லாதவனை என்னை (என் தலைவன்) என்பதும் சொல்லாமல் தோன்றும் மரபு.[51]
  • ஒப்பு, உரு (கற்பனை), வெறுப்பு, கற்பு, ஏர் (பெருமித அழகு), எழில் (கச்சிதமான அழகு). சாயல், நாண், மடம், நோய், வேட்கை, நுகர்வு – என்பன போன்ற சொற்களின் பொருளைக் காட்டமுடியாது. உணர்ந்துகொள்ளத்தான் முடியும்.[52] எனினும், இவை மண்ணுலகிலும் வானுலகிலும் இல்லாமல் இல்லை.[53]

அடிக்குறிப்பு தொகு

வெறுமனே தரப்பட்டுள்ள எண்கள் இவ்வியலில் உள்ள நூற்பா எண்ணைக் குறிக்கும்.

  1. 1
  2. 2
  3. நெஞ்சோடுபேசுதல் - மலர் காணின் மையாத்தி நெஞ்சே – திருக்குறள்.
  4. 3
  5. 4
  6. 5
  7. 6
  8. 7
  9. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை – திருக்குறள் 1277
  10. 8
  11. கதுமெனத் தான் நோக்கித் தானே கழுலும் இது நகத்தக்கது உடைத்து – திருக்குறள் 1173
  12. 9
  13. 10
  14. 11
  15. 12
  16. 13
  17. 14
  18. 15
  19. 16
  20. 18
  21. கண் கன்னைத் தின்கிறது எனல். “கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இலை என்னைத் தின்னும் அவர்க் காணலுற்று. –திருக்குறள் 1244
  22. 17, 18
  23. 19
  24. 20
  25. 21
  26. 22
  27. 23
  28. 24
  29. 25
  30. 26
  31. 27
  32. 28
  33. 29
  34. 30
  35. 31
  36. 32
  37. 33, 34, 35
  38. 36
  39. 37
  40. 38
  41. 39
  42. 40
  43. 41
  44. 42
  45. 43
  46. 44
  47. 45
  48. 46
  49. 47
  50. 48, 49
  51. 50
  52. 51
  53. 52