தொழிற்பயிர்

தொழிற்பயிர் (industrial crop / nonfood crop) என்பது பொருள்களை உற்பத்தி செய்வதற்காக விளைவிக்கப்படும் பயிராகும். இதை உணவுப் பொருளற்ற பயிர் (உணவு அல்லாத பயிர்) என்றும் கூறுவர். எடுத்துக்காட்டாக, நார்ப்பொருள்களை உணவுக்காக பயன்படுத்துவதை விட ஆடை தயாரிப்பிற்காகப் பயன்படுத்துவது.

தொழிற்பயிர்களின் நோக்கம் தொகு

கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளை கொடுப்பதற்காகவும், விவசாயத் துறையின் வருவாயை அதிகப்படுத்தவும் ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட பொறுப்பே தொழில்பயிர்களாகும். மேலும், தொழிற்பயிர்கள் பிற நாடுகளின் இறக்குமதிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்த தகுந்த பொருள்களையும் வழங்குகின்றன.

பன்முகத்தன்மை தொகு

பயிர்களின் வேறுபாட்டு எல்லையில் உணவுப் பொருளற்ற பயிர்களின் பயன்பாடு என்பது பரந்து விரிந்துள்ளது. பாரம்பரிய சாகுபடிப்பயிரான கோதுமை, குறைந்த மரபுசார் பயிர்களான சணல் மற்றும் புல்வகைகளும் இதில் அடங்கும்.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்பயிர்&oldid=3877166" இலிருந்து மீள்விக்கப்பட்டது