தொழில்நுட்ப ஓய்வு நேரம் ( கைபந்து)


தொழில்நுட்ப ஓய்வு நேரம் ( கைபந்து) தொகு

                கைபந்து மற்றும் கடற்கரை கைபந்து  போட்டிகளில் தொழில்நுட்ப ஓய்வு நேரம் வழங்க சர்வதேச கைப்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது. இந்த சிறப்பு ஓய்வுநேரம் எப்பொழுதும் வழங்கங்கப்படும் ஓய்வு நேரத்துடன் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்ப  ஓய்வுநேரம், விளையாடும் பொழுது ஏற்படும்  குறைகளை ஆய்வு செய்து  ஆட்டத்தின் தன்மையை மாற்றி  மேம்படுத்தவும், தொழில்ரீதியான விளம்பரங்கள் மூலமாக  இவ்விளையாட்டின் தரத்தையும் உயர்த்தவும் பயன்படுகிறது.
வெளி மற்றும் உள்ளரங்க கைப்பந்து போட்டிகளில் ஒரு முறையாட்டத்திற்கு இரண்டு தொழில்நுட்ப  ஓய்வு நேரங்கள் வழங்கப்படுகிறது. ஆட்டத்தில் எந்த அணி முதலில் 8 மற்றும் 12 புள்ளிகளை எடுக்கிறதோ அப்பொழுது தொழில்நுட்ப ஓய்வு நேரம்  வழங்கப்படுகிறது. கடற்கரை கைபந்து  போட்டியில் ஒரு  முறையாட்டத்திற்கு ஒரு  தொழில்நுட்ப ஓய்வு நேரம் இரு அணிகளும் இணைந்து 21 புள்ளிகள் எடுக்கும்பொழுது வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப ஓய்வு நேரம் சர்வதேச போட்டிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகைப்பந்து தொகு

  • 30 நொடிகள் ஓய்வு நேரம்
  • 1 மற்றும் 2 வது முறையாட்டங்களின் பொழுது ஒரு தொழில்நுட்ப ஓய்வு நேரம் வழங்கப்படுகிறது ( இரு அணிகளும் சம நிலைபெற்று அடுத்து ஆடும் முறை ஆட்டங்களில் தொழில்நுட்ப ஓய்வு நேரம் வழங்கப்படமாட்டாது)

வெளி மற்றும் உள்ளரங்க கைபந்து தொகு

  • 60 நொடிகள் ஓய்வு நேரம்
  • இரண்டு தொழில்நுட்ப ஓய்வு நேரங்கள், 1,2,3 மற்றும் 4 முறையாட்டங்களில் பொழுதுவழங்கப்படுகிறது. ( இரண்டு அணியும் சமநிலை பெற்று 5 வது முறையாட்டத்தின் பொழுது தொழிற்நுட்ப ஓய்வுநேரம் வழங்கப்படமாட்டாது)

மேற்கோள் தொகு

https://en.wikipedia.org/wiki/Volleyball_in_India

இக்கட்டுரையானதுஆங்கிலத்திலிருந்துமொழிபெயர்க்கப்பட்டது.