தோக்கியோ துறைமுகம்

யப்பானிலுள்ள துறைமுகம்

தோக்கியோ துறைமுகம் (The Port of Tokyo) யப்பானின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றும், அமைதிப் பெருங்கடல் கரையினில் உள்ள முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாகவும் உள்ளது. இத்துறைமுகம் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாகவும் உள்ளது. இந்தத் துறைமுகம் ஆண்டொன்றுக்கு 32,000 கப்பல்களுக்கு சேவையளிக்கும் 30,000 பணியாளர்களைக் கொண்ட வேலையளிப்பவராகவும் உள்ளது.

தோக்கியோ துறைமுகமானது சிபா துறைமுகத்திற்கு மேற்காக 14 கடல்வழி மைல் தொலைவிலும் மற்றும் யோகோகாமா துறைமுகத்தில் இருந்து வடகிழக்சுாக சுமார் 23 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது யப்பானின் தலைநகரமாகவும், யப்பானிய அரச குடும்பத்தினரின் வசிப்பிடமாகவும், அரச குடும்பம் மற்றும் உயர்குடி மக்களின் அரண்மனைகளும் அமைந்துள்ள இடமாக இருந்துள்ளது. இத்துறைமுகம் 23 சிறப்பு நகரவட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் உள்ளது. ஒவ்வொரு நகர்வட்டப் பகுதியும் ஒரு நகரமாக நிர்வகிக்கப்படுகிறது. தோக்கியோ துறைமுகமானது, உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டில், சுமார் 8.5 மில்லியன் மக்கள் தோக்கியோ துறைமுகத்தில் வசித்தனர். மாவட்டம் போன்று விரிந்தமைந்த இந்த நிலப்பகுதியானது 12 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு வசிப்பிடப் பகுதியாக உள்ளது.[1]

வரலாறு தொகு

தோக்கியோ துறைமுகத்தின் முன்னோடியான, எடோ துறைமுகம் (எடோ மினாடோ) யப்பானின் கடல் வணிகத்தில் மிக முக்கியப் பங்கினை வகித்ததாகும்.[2] மேலும், இது எடோவின் மக்களுக்கு பொருட்களை வழங்குவதில் ஒரு பகிர்ந்தளிக்கும் மையமாகவும் விளங்கியுள்ளது. டோகுக்வா சோகுனேட்டு காலத்தில் இத்தகைய வணிகத்திற்காக யோக்கோகாமா துறைமுகம் ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்ததால் டோக்கியோ துறைமுகமானது தனது சர்வதேச வணிகத்தைத் தொடங்க அனுமதிக்கப்படவில்லை.

1600 கள் முழுவதும், தோக்கியோ துறைமுகம் வேகமாக வளர்ந்தது, 1700 களின் தொடக்கத்தில் அதன் மக்கள்தொகை ஒரு மில்லியனைத் தாண்டியது. கியோட்டோ பேரரசருக்குச் சொந்தமானதாகவும், யப்பானின் அரசவம்சத் தலைநகரமாகவும் இருந்தாலும், எடோ (இன்று தோக்கியோ துறைமுகம்) நாட்டின் பொருளாதார, வர்த்தக மற்றும் அதிகார மையமாக இருந்தது.

இரண்டு அரை நூற்றாண்டுகளில் இராணுவ ஆட்சிக்கு எதிராக, டோகுகாவா சோகுனேட்டின் ஆட்சி அகற்றப்பட்டு, மீண்டும் யப்பானிய அரச வம்ச ஆட்சி மீட்டெடுக்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் மெய்ஜி பேரரசர் எடோவிற்குச் சென்றார், எடோ கோட்டை அரச வம்சத்தின் அரண்மனை ஆனது. தோக்கியோ நகரம் நிறுவப்பட்டது. தோக்கியோ துறைமுகம் தேசிய தலைநகரமாக இருந்தது. நகராட்சி நிர்வாகம் அகற்றப்பட்டு, 1943 ஆம் ஆண்டில் தோக்கியோவின் பெருநகரக் கழகத்துடன் இணைக்கப்பட்டது.[3]

இறுதியாக, 1880 ஆம் ஆண்டில் இத்துறைமுகத்தின் வளர்ச்சியானது, சுமிடோ ஆற்றின் கயவாய்கள் மற்றும் வாய்க்கால்களைத் தூர்வாறுவதன் மூலமாக சுகிசிமா மற்றும் சிபாவ்ரா ஆகிய நிலங்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் காரணமாக, மெய்ஜியின் காலத்தில் ஊக்குவிக்கப்பட்டது.

தோக்கியோ துறைமுகம் 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு குறிப்பிடத்தக்க பேரழிவுகளை சந்தித்தது. 1923 ஆம் ஆண்டில் கிரேட் காண்டா பூகம்பத்தால் 140 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தரைவழிப் போக்குவரத்தானது பூகம்பம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் தோக்கியோ துறைமுகத்தின் மதிப்பானது அதிகரித்தது. 1925 ஆம் ஆண்டில், நவீன இனோடு முனையத்தின் பணிகள் நிறைவுற்றது. 1932 ஆம் ஆண்டில் சாய்பவ்ரா முனையம் செயல்படத் தொடங்கியது, மேலும் 1934 ஆம் ஆண்டில் டேக்சிபா முனையம் கட்டுமானம் முடிக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டில், தோக்கியோ துறைமுகம் ஒரு சர்வதேச துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டில், நகரம் நேசப்படைகளால் இரக்கமற்ற முறையில் குண்டுவீச்சுக்குள்ளானது. நகரில் பாதிக்கும் மேலாக அழிவுக்குள்ளான போது இரண்டு இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின், டோக்கியோ துறைமுகமானது முற்றிலும் புனரமைக்கப்பட்டு செழித்தோங்கியது.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.worldportsource.com/ports/review/JPN_Port_of_Tokyo_1380.php
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-27. பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.
  3. http://www.worldportsource.com/ports/review/JPN_Port_of_Tokyo_1380.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்கியோ_துறைமுகம்&oldid=3559714" இலிருந்து மீள்விக்கப்பட்டது