தோக்கியோ நீர்வழங்கல் வரலாற்று அருங்காட்சியகம்
தோக்கியோ நீர்வழங்கல் வரலாற்று அருங்காட்சியகம் (Tokyo Waterworks Historical Museum) என்பது சப்பான் நாட்டின் தோக்கியோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு பொது அருங்காட்சியகமாகும். தோக்கியோவில் நன்னீர் வழங்கல் மற்றும் விநியோகத்தின் வளர்ச்சி குறித்த ஒரு வரலாற்று அருங்காட்சியகமாக இது அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 15 ஏப்ரல் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 அன்று தோக்கியோ நீர்வழங்கல் வரலாற்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இரண்டு கண்காட்சி தளங்களும், மூன்றாவது தளத்தில் ஒரு நூலகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. ஓங்கோவில் ஓங்கோ நீர் வழங்கல் நிலையப் பூங்காவிற்கு அடுத்து இந்த அருங்காட்சியகம் உள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.[1]
東京都水道歴史館 | |
அருங்காட்சியக நுழைவாயில் | |
நிறுவப்பட்டது | 15 ஏப்ரல் 1995 |
---|---|
அமைவிடம் | ஆங்கோ, பங்கையோ, தோக்கியோ, சப்பான் |
ஆள்கூற்று | 35°42′12″N 139°45′38″E / 35.70335009197876°N 139.7604902699291°E |
உரிமையாளர் | தோக்கியோ பெருநகர அரசாங்க நீர்வழங்கல் பணியகம் |
கண்காட்சிகள்
தொகுஅருங்காட்சியகத்தில் இரண்டு கண்காட்சி தளங்கள் உள்ளன. எடோ காலத்தில் நகரத்திற்கு நன்னீர் வழங்குவதற்காக கால்வாய்கள் கட்டப்பட்டதை 2 ஆவது தளம் காட்டுகிறது. இத்தளத்தில் பல பழைய மர நீர் குழாய்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சப்பானியப் பேரரசின் முதல் அரைக்காலப் பகுதியான மெய்சி காலம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் நீர் அமைப்பின் நவீனமயமாக்கல் போன்றவற்றை 1 ஆவது தளம் காட்டுகிறது. கண்காட்சி சப்பானிய மொழியில் இருந்தாலும் ஒலிக்கோப்பு வழிகாட்டிகள் ஆங்கிலத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "General Information". Tokyo Metropolitan Government Bureau of Waterworks. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.