தோட்டம் (விளையாட்டு)

தோட்டம் என்னும் விளையாட்டு ஒரு நடிப்பு விளையாட்டு. சிறுவர்கள் ஆடும் விளையாட்டு இது.

தலையில் முட்டி விளைச்சல் முற்றியது எனல்

ஆடும் முறை தொகு

ஒருவர் அரசன். இன்னொருவர் சேவகன். மற்றையோர் தோட்டக்காரர்கள். உழுதல், விதைத்தல், நீர்ப்பாய்ச்சுதல் முதலான செயல்கள் நடித்துக் காட்டப்படும். விதை முற்றியது எனச் சொல்லி நடிக்கும்போது சேவகன் வருவான். முற்றியது எனச் சொன்னவன் தலையில் தன் தலையால் முட்டி முற்றியது என்பான். சேவகன் அவனை அழைத்துச் சென்றுவிடுவான். பின் அடுத்தவரை முட்டி அழைத்துச் செல்வான். ஒருவர் மிஞ்சும்போது மிஞ்சியவர் அரசனிடம் காணாமல் போனவர்கள் பற்றி முறையிடுவார். அரசன் வந்து அனைவரையும் சேர்த்துவைப்பான்.

இவற்றையும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டம்_(விளையாட்டு)&oldid=1011081" இலிருந்து மீள்விக்கப்பட்டது