தோனா சர்க்கார்

நேபாளத்தை சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர், எழுத்தாளர், பொதுப் பேச்சாளர் மற்றும் நாகரிக வணிகத

தோனா சர்க்கார் (Dona Sarkar) ஒரு மென்பொருள் பொறியாளர், எழுத்தாளர், பொதுப் பேச்சாளர் மற்றும் நாகரிக வணிகத்தின் உரிமையாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.[2]

தோனா சர்க்கார்
Dona Sarkar
பிறப்பு29 ஆகத்து 1980 (1980-08-29) (அகவை 44)
காட்மாண்டு, நேபாளம்[1]
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
பணிமைக்ரோசாஃப்ட் அணுகலுக்கான தொழில்நுட்ப இயக்குநர்
வலைத்தளம்
donasarkar.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

இவர் மைக்ரோசாஃப்ட் அணுகலுக்கான தொழில்நுட்ப இயக்குநராக உள்ளார். முன்னதாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் குறைந்த குறியீடு/குறியீடு அல்லாத மேம்பாட்டு தளமான பவர் பிளாட்ஃபார்ம் [3] அமைப்பிற்காக ஒரு வழக்கறிஞர் குழுவையும் வழிநடத்தினார். 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இவர் வழிநடத்திய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் விண்டோசு இன்சைடர் மென்பொருள் சோதனைக் குழுவின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.[4]

சர்க்கார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு இவர் கணினி அறிவியல் பாடத்தை பயின்றார்.[5][6][7]

2016 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் , சர்க்கார் கேப் ஆல் என்பவருக்குப் பதிலாக விண்டோசு இன்சைடர் பொது சோதனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[8] கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் வாடிக்கையாளர்களுடன் ஈடுபாட்டை அதிகரிப்பது இவரது மிகவும் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றாகும். இவரும் இவரது குழுவும் நைச்சீரியா, கென்யா, உகாண்டா, தான்சானியா மற்றும் உருவாண்டாவில் உள்ள புது நிறுவன நிறுவனர்களுக்காக தொழில்முனைவோர் கடின துவக்க முகாம்களை உருவாக்கி, தொழில் தொடங்கும் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத் தேவைகளை நன்கு புரிந்துகொண்டனர்.[2] மாடல் 47: என்ற கடின துவக்க முகாம் புத்தகத்தை இவர் இணைந்து எழுதியுள்ளார், இந்தத் திட்டத்தில் இவரது அனுபவங்களின் அடிப்படையில் இப்புத்தகம் ஒரு வகையான தொழில்முனைவோர் விவிலியம் என கருதப்படுகிறது. .

தோனா சர்க்கார் ஒரு குறிப்பிடத்தக்க பொது பேச்சாளராக இயங்கினார். பணியிடத்தில் மன ஆரோக்கியம், எண்ணிம அணுகல், ஒருவரின் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேறுதல் மற்றும் ஏமாற்று நோய்க்குறியை சமாளித்தல் போன்ற தலைப்புகளுக்கு இவர் பெயர் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபை, உலகப் பொருளாதார மன்றம் உட்பட உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மேடைகளில் இவர் தோன்றி பேசியுள்ளார்.

2009 ஆம் ஆண்டில், தோனா , வாசிங்டனில் உள்ள சியாட்டிலில் உள்ள பிரிமா தோனா என்ற நெறிமுறையில் உருவாக்கப்பட்ட நவ நாகரிக ஆடை வடிவமைப்பு வரிசையைத் தொடங்கினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ho, Vanessa (1 June 2016). "Dona Sarkar". Story Labs (மைக்ரோசாப்ட்). https://news.microsoft.com/stories/people/dona-sarkar.html. 
  2. 2.0 2.1 "She's an engineer, entrepreneur, fashionista and "Ninja Cat"". www.cbsnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
  3. "Microsoft's Windows Insider chief Sarkar is moving to a new developer-relations role". ZDNET.com. Archived from the original on 2020-03-03.
  4. Eran Megiddo, "Windows Insider leadership update", Microsoft Windows Blogs, October 7, 2019
  5. New Student Record, University of Michigan. UM Libraries.
  6. Gupta, Ankit (3 June 2016). "Microsoft features Dona Sarkar, the new leader of Windows Insider Program". The Windows Club. TWCN Tech News. Archived from the original on 2016-06-08.
  7. "Dona Sarkar: Testing Software and Advocating Customers". 12 March 2019. Archived from the original on 2009-03-18.
  8. Preece, Caroline (2 June 2016). "Microsoft makes Dona Sarkar head of Windows 10 Insider Program". IT Pro. Dennis Publishing. Archived from the original on 2016-06-03.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோனா_சர்க்கார்&oldid=4166885" இலிருந்து மீள்விக்கப்பட்டது