தோம் ஏபல்

அமெரிக்க வானியலாளர்

தோம் ஏபல் (Tom Abel) (born 1970) ஒரு செருமானிய அண்டவியலாளர் ஆவார். இவர் அண்டவியல் கட்டமைப்பை ஆய்வு செய்துவருகிறார். இவர் புடவியின் முதல் தலைமுறை விண்மீன்களில் அருகிய பொன்ம அடர்விண்மீன்களின் ஈர்ப்புக் குலைவை முதன்முதலாக மதிப்பீடு செய்தார். இந்த ஆய்வை இவர் கிரெகு எல். பிறையன், மைக்கேல் எல். நார்மன் ஆகியோரோடு இணைந்து செய்து 2000 ஆம் ஆண்டில் அறிவியல் இதழில் வெளியிட்டார் (2002, 295, 93). இவர் தன் முனைவர் பட்டத்தை 2000 ஆம் ஆண்டில் முனிச்சில் அமைந்த உலூத்விக் மாக்சுமில்லன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

இவர் கலிபோர்னியாவில் உள்ள பாலோ அல்டாவில் அமைந்த சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும் சிலாக் (SLAC) தேசிய முடுக்கி ஆய்வகத்தின் துகள் இயற்பியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் 2013 முதல் 2018 வரை காவ்லி துகள்வானியற்பியல், அண்டவியல் நிறுவன இயக்குநராக இருந்து வருகிறார்.[1]

பின்னணி தொகு

ஏபல் செருமனியில் உள்ள உலோவர் பவாரியாவில் பிறந்தார்.[2]

பணிகள் தொகு

இவரது முதன்மையான ஆர்வங்களாக பின்வருப் பணிகள் அமைகின்றன:

  • பாழ்நிலை (Primordial) விண்மீன் உருவாக்கம்
  • புடவியின் கட்டமைப்பு உருவாக்கமும் மறுமின்னணுவாக்கமும்
  • வானியற்பியல்சார் பாய்ம இயங்கியல்
  • கதிரியக்க பரிமாற்றம்

மேற்கோள்கள் தொகு

  1. "Curriculum Vitae" (PDF). tomabel.org. Abel's personal website. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  2. "Tom Abel » About Me". tomabel.org. Abel's personal website. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோம்_ஏபல்&oldid=2991359" இலிருந்து மீள்விக்கப்பட்டது