தோர் (தொன்மம்)

தோர் (ஆங்கிலம்: Thor) என்பவர் நோர்சு தொன்மவியலலில் இடம்பெறும் சுத்தியலை ஆயுதமாகக் கொண்ட ஒரு கடவுள் ஆவார். இவர் இடி, மின்னல், புயல், ஓக் மரங்கள், பலம், கருவளம், மனிதர்களின் பாதுகாப்புக்கான கடவுள் ஆவார். தோர் ஒரு போர் வீரராகவும், விசுமானவராகவும் விபரிக்கப்படுகிறார். யேர்மனிய தொன்மவியலிலும், பகன் (pagan) சமயத்திலும் இவர் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறார். தோர் பிற இந்திய-ஐரோப்பிய தொன்மப் பாத்திரங்களோடு ஒப்பிடத்தக்கவர். குறிப்பாக இந்துக் கடவுள் இந்திரன், செலட்டிக் கடவுள் Taranis, பால்டிக் கடவுள் Perkūnas மற்றும் ஸ்லாவிக் கடவுள் Perun ஆகியவர்களோடு ஒப்பிடத்தக்கவர்.

அரக்கர்களுடான தோரின் சண்டை (1872) ஆகுனர்: மார்தென் எஸ்கில் விங்.

நோர்சு தொன்மவியலில் தோர் தனது பலத்தையும், ஆயுதத்தையும் பயன்படுத்தி மிகத் தீவரமாக தனது எதிரிகளைக் தாக்கி அழிப்பார். கடல் அரக்கன் Jörmungandr எதிர்த்துப் போராடி அவரை கொன்றார். கொன்ற பின் அவரால் ஒன்பது அடிகளை மட்டும் எடுக்க முடிந்தது. இருவரின் அழிவும் ராக்னரோக் (Ragnarök) இல் எதிர்வு கூறப்படுகிறது.

வைக்கிங் காலத்துக்கு முன்பு தோரின் பெயரைத் தாங்கிய தனிநபர் அல்லது இடப் பெயர்கள் அரிது. வைக்கிங் காலத்தில் தோர் என்ற பெயர் அல்லது அதன் வேர்ச் சொல்லை உள்ளடக்கிய தனிநபர் பெயர்கள் கூடிய எண்ணிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வைக்கிங் காலத்தில் தோரின் பெயரைத் தாங்குவது மற்றும் தோரின் சுத்தியல் பதக்கத்தை அணிவது கிறித்தமதமாக்கத்துக்கு எதிரான ஒரு குறியீடாகப் பார்க்கப்படலாம்.[1]

தோற்ற, குடும்ப விபரிப்பு தொகு

தோர் உக்கிரமான கண்களையும், சிகப்பு மயிரையும், சிகப்பு தாடியையும் கொண்டவராக பெரிதும் விபரிக்கப்படுகிறார்.[2] இவர் எப்பொழுதும் விசித்திர பண்புகள் கொண்ட மூன்று முக்கிய பொருட்களை எப்பொழுதும் வைத்திருப்பார்: சுத்தியல், கையுறைகள் மற்றும் இடுப்புப்பட்டி. இவரது சுத்தியல் மலைகளை உடைக்கக் கூடியதாகவும், இவரது இடுப்புப்பட்டி மிகப்பெரிய பலத்தை வளங்கக் கூடியதாகவும் கூறப்படுகிறது.

தோரின் தந்தையாக ஓடின் விபரிக்கப்படுகிறார். இவருக்கு பல சகோதர்கள் உண்டு. தோரின் மனைவி பெண் கடவுள் சிப் (Sif) ஆவார். இவரது காதலர் ஜோன்டென் ஜார்ன்ஸாகா (jötunn Járnsaxa) ஆவார். இவருக்கு இரு மகள்களும் மகன்களும் உள்ளனர்.

தொன்மவியல் பதிவுகள் தொகு

நான்கு அல்லது ஐந்து மத்திய கால (~9 - 12 ம் நூற்றாண்டுகள்) கல்வெடுக்களில் தோர் பற்றிய குறிப்புக்கள் அல்லது படங்கள் உள்ளன. இவை டென்மார்க், சுவீடன் நாடுகளில் உள்ளன. தோரின் சுத்தியல் வடிவத்தைப் பொறுத்த ஆபரணங்கள் அல்லது பதக்கங்கள் வைக்கிங் காலத்தைச் சார்ந்த இடுகாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறித்தவ சிலுவை போன்று தமது சமத்தைக் குறிக்கும் வகையில் சுத்தியல் பதக்கங்களை மக்கள் அணிந்திருக்கலாம்.[3]

நவீன தாக்கம் தொகு

தோர் தொடர்ச்சியாக வெகுஜன பண்பாட்டில் இடம்பெற்று வருகிறார். கவிதைகள், ஓவியங்கள், வரைகதைகள், திரைப்படங்கள், நிகழ்பட விளையாட்டுக்களில் தோர் இடம்பெறுகிறார். 1962 ம் ஆண்டு அமெரிக்க மார்வல் வரைகதைகளில் தோர் ஒடின்சண் என்ற ஒரு கதாபாத்திரத்தை தோரைத் தழுவி ஸ்ரான் லீ, லாறி லீப்பெர் மற்றும் யக் கீர்பி உருவாக்குகிறார்கள்.[4]

2018 கோட் ஒப் வார் (God of War) என்ற நிகழ்பட விளையாட்டில் தோர் ஒரு கொலை வெறியாளானகாக சித்தரிக்கப்படுகிறார். இவர் ஓடனின் அறிவுக்கான வேட்கையில், அவரின் உத்தரவின் பெயரில் அரகர்களையும், வழியில் உள்ள வேறு யாரையும் கொல்பவராக சித்தரிகப்படுகிறார்.

குறிப்புகள் தொகு

  1. Simek (2007:321).
  2. On the red beard and the use of "Redbeard" as an epithet for Thor, see H.R. Ellis Davidson, Gods and Myths of Northern Europe, 1964, repr. Harmondsworth, Middlesex: Penguin, 1990, ISBN 0-14-013627-4, p. 85, citing the Saga of Olaf Tryggvason in Flateyjarbók, Saga of Erik the Red, and Flóamanna saga. The Prologue to the Prose Edda says ambiguously that "His hair is more beautiful than gold."
  3. Simek (2007:219) and Orchard (1997:114).
  4. Reynolds (1994:54).

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்_(தொன்மம்)&oldid=2536385" இலிருந்து மீள்விக்கப்பட்டது