தோல் (நூல்வனப்பு)

நூலின் வனப்பு-இயல்புகள் எட்டு எனத் தொல்காப்பியர் பகுத்துக் காட்டுகிறார். அவற்றில் தோல் என்பது ஒன்று. [1]

ஆற்றொழுக்கான நடையை ‘இழுமென் மொழி’ என்பர்.

இளம்பூரணர்
இழுமென் மொழியை இளம்பூரணர் கதைமொழி எடுத்துக்கொண்டு மார்கண்டேயனார் காஞ்சி என்னும் நூலிலிருந்து ஒரு பாடலை எடுத்துக்காட்டாகத் தருகிறார். மற்றும் பரந்த மொழியால் அடி நிமிர்ந்து ஒழுகும் நூல் என மலைபடுகடாம் என்னும் நூலைக் காட்டுகிறார்.
பேராசிரியர்
இழுமென் மொழியால் விழுமியது கூறும் நூல் என்பது கதை சொல்லும் ஆசிரியப்பாவால் ஆன பொருள்-தொடர் பாட்டு-நூல் எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். பழைய கதையைச் சொல்லும் தொன்மொழி தோல் ஆயிற்று என்பது இவர் கருத்து. (தொன்மொழி < தோன்மொழி)
  • தொன்மை – பழங்கதை நூல்
  • தோல் – படையில் முன்னே நடக்கும் தோல்படை போலத் தொகுப்பாக அமையும் முன்னுரை-நூல்

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்
    பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும்
    தோல் என மொழிப தொன்னெறிப் புலவர் – தொல்காப்பியம், செய்யுளியல் 230
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_(நூல்வனப்பு)&oldid=3297990" இலிருந்து மீள்விக்கப்பட்டது