தோழர் எனும் சொல் "தோழன்" எனும் சொல்லை "ஆர்" விகுதியை இணைத்து மரியாதை வழக்கில் அழைக்கும் சொல்லாகும். "ஆபத்துக்கு தோள் கொடுப்பவன் தோழன்" எனும் அடைமொழி தமிழரிடையே காணப்படுவதற்கு அமைய, தோழர் என்பது நண்பர் என்பதற்கு ஒத்தக்கருத்துச் சொல்லாகவும் பயன்படுகிறது.

இருப்பினும் மார்க்சியம் கொள்கைகளைக் கொண்டோர், தம்மை அல்லது தமது சக உறுப்பினர்களை ஒருவருக்கு ஒருவர் தோழமையுடன் அழைப்பதற்காக "தோழர்" என்று கூறிக்கொள்வர்; அல்லது தோழர் என்று அழைத்துக்கொள்வர்.

ஈழ இயக்கங்கள்

தொகு

ஈழ இயக்கங்கள் இடையே மாக்கசியக் கொள்கைகளை கொண்டிருந்த இயக்கங்களும் அவ்வாறே தமது சக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தோழர் என்று அழைத்துக்கொண்டனர். குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் போன்ற இயக்க உறுப்பினர்கள் அவ்வாறு அழைத்துக்கொண்டனர்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழர்&oldid=4034455" இலிருந்து மீள்விக்கப்பட்டது