த. ச. அ. சிவபிரகாசம்

த. ச. அ. சிவபிரகாசம் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சேரன்மாதேவி தொகுதியில் இருந்து, சுதந்திராக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பின்னர் 1980 மற்றும் 1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியிலிருந்து, இந்திய பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

வகித்த பதவிகள்தொகு

  • 1971-76, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், சுதந்திராக் கட்சி
  • 1980, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (ஏழாவது)
  • 1980, பொதுக் குழு உறுப்பினர், திமுக, தமிழ்நாடு
  • 1980-84, ஆலோசனைக் குழு, வர்த்தக அமைச்சர்
  • 1981-91, மாவட்ட பொருளாளர், திமுக, திருநெல்வேலி மாவட்டம்
  • 1996, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (பதினோராம்)

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ச._அ._சிவபிரகாசம்&oldid=2720089" இருந்து மீள்விக்கப்பட்டது