த. மங்கள பிரியதர்சினி

த. மங்கள பிரியதர்சினி (D. Mangala Priyadarshini) ஒரு குறிப்பிடத்தக்க இந்திய பெண்ணியவாதி மற்றும் கன்னட விமர்சகர் ஆவார். நவோதயா, சுருஜனா சைத்யா, வீரசிவா மற்றும் சிறீவதா (பெண்ணியம்) ஆகிய இலக்கியங்களில் பரவலாக அறியப்படும் பேச்சாளராகவும் உள்ளார். 2012 ஆம் ஆண்டு வரை, இவர் வித்யா வர்தக சங்க பட்டப்படிப்பு கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். சேசாத்ரிபுரம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். [1] சுமார் 20 புத்தகங்கள் மற்றும் பல கட்டுரைகளை வெளியிட்டார். [2] "சிறந்த பெண் விமர்சகர்" விருதினையும் பெற்றுள்ளார். இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் வானொலி பேச்சு நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார். [3] [4]

சல்லக்கரேயில் முலுகாநாடு பிராமண குடும்பத்தில் பி.வி. தக்சிணா மூர்த்தி என்பாருக்கு மகளாகப் பிறந்தார். பெங்களூரில் வளர்ந்த இவர், சிறு வயதிலிருந்தே இலக்கிய படைப்புகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். 22 வயதில், விஞ்ஞானி எஸ்ஏ பண்டிட்டை மணந்தார். இவருக்கு மிருதுளா பண்டிட் என்ற ஒரு மகள் உள்ளார்.

குறிப்பிடத்தகுந்த படைப்புகள் தொகு

  • ஆய்வறிக்கை: நவோதயா காவியதல்லி அனுபவதா அம்சகலு
  • சிறீவதா மாட்டு மஹிலா அத்யாயனா
  • பெலகெரே பர்வதம்மா
  • பிரசீனா காவ்யா தாரே - 1
  • மொழிகே மகாதேவம்மா
  • ஆதுனிகா கன்னட காவ்யதா ஸ்வரூப* பேந்திரே - ஞானபீட பிரசஸ்தி விஜேதரு

சான்றுகள் தொகு

  1. "Seshadripuram College-Always Aiming High". Spmcollege.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.
  2. "Sanchaya". Archive.cscs.res.in. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Dakshina Kannada, a land of literary giants - Deccan Herald". 2004-06-20. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.
  4. "indexpage07". Bcwcc.org. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._மங்கள_பிரியதர்சினி&oldid=3823550" இலிருந்து மீள்விக்கப்பட்டது