த ஹார்ட்ஃபுல்னெஸ் வே

த ஹார்ட்ஃபுல்னெஸ் வே, கம்லேஷ் டி. படேல் மற்றும் ஜோஷுவா பொல்லாக் ஆகியோரால் எழுதப்பட்டு, 2018-ல் பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆன்மீக தன்மைமாற்றத்திற்கான இதயம் சார்ந்த தியானத்தைப் பற்றிய புத்தகமாகும்.

The Heartfulness Way எனும் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்
ஆசிரியர் கம்லேஷ் டி. படேல் ஜோஷுவா பொல்லாக்
நாடு இந்தியா, அமெரிக்கா
மொழி ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், குஜராத்தி, கன்னடம், மராத்தி
பொருள் தியானம், ராஜயோகம், சுய-உதவி, ஆன்மீகம், யோகா
வகை கற்பனையல்லாதது
பிரசுரிப்பவர் வெஸ்லேண்ட் பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரிவீல் பிரஸ் (நியூ ஹார்பிஞ்ஜர் பப்ளிக்கேஷன்ஸ்)
ஊடக வகை அச்சு (கடின உறை / காகித அட்டை)
பக்கங்கள் 215 பக்
விருதுகள் இந்துஸ்தான் டைம்ஸின் நீல்சன் சிறந்த கற்பனையல்லாத புத்தகங்கள் பட்டியலின் முதல் பத்து புத்தகங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ISBN 9789387578098 Other isbn - 9789386850560, 9781684031351, 9781684031368
OCLC 1038721299
இணையதளம் http://theheartfulnessway.com

புத்தகத்தைப் பற்றி தொகு

தாஜி என்று பரவலாக அழைக்கப்படும் கம்லேஷ் டி. படேல்[1], ஹார்ட்ஃபுல்னெஸ் குரு பரம்பரையின் நான்காவது குரு ஆவார். ஆன்மீகத் தேடுதலின் இயல்பை பற்றி ஆராயும்போது, ஒரு ஆன்மீக நாட்டமுடையவர் மேற்கொள்ள வேண்டிய பயணத்தை பற்றி இந்த புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான ஒரு தொடர் கலந்துரையாடல் வழியாக, ஹார்ட்ஃபுல்னெஸை பயிற்சி செய்பவரும் பயிற்சியாளருமான ஜோஷுவா பொல்லாக்குக்கு ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சியின் கோட்பாடுகள் பற்றியும், அதன் தத்துவத்தைப் பற்றியும் தாஜி விளக்குகிறார்.

இங்கே, ஜோஷுவா  இதயத்தின் அடியாழத்திலிருக்கும் உண்மையான மையத்தைப்  பற்றி கண்டறிய விழைகிறார். தாஜி அவருக்கு பாதையைக் காட்டுகிறார். தாஜி, தியானம் பற்றி விளக்குகையில், ஒருவரின் உள்நிலை என்னவாக இருந்தபோதிலும், அதை இயல்பானதாக ஆக்குகிறது என்கிறார். அது இயற்கைத்தனத்தை உருவாக்குகிறது. மேலும், ஒருவர் அதை நோக்கிச் செல்கையில், அவரிடத்திலிருக்கும் செயற்கையானவை மறைய ஆரம்பித்துவிடும் என்றும் கூறுகிறாா். இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள சோதனை முறை, இந்த உண்மையைத் தாங்களே கண்டறிந்துகொள்ள பலருக்கு உதவியிருக்கிறது என்று இந்நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.

இப்புத்தகம், ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், குஜராத்தி, கன்னடம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

பிரசுரம் & வெளியீடு தொகு

த ஹார்ட்ஃபுல்னெஸ் வே, இந்தியாவில் வெஸ்லேண்ட் பப்ளிக்கேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அமெரிக்காவில் ரிவீல் பிரஸ் (நியூ ஹார்பிஞ்ஜர் பப்ளிக்கேஷன்ஸ்) நிறுவனத்தினரால் 2018-ல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதன் எழுத்துப் பதிப்புரிமை, அமெரிக்கா, டெக்ஸாஸில் உள்ள ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிடியூட்டை சார்ந்தது. இப்புத்தகம், இந்திய ஜனாதிபதி, ராம் நாத் கோவிந்த் அவர்களால் ஜனவரி 2018 – ல் வெளியிடப்பட்டது.

வரவேற்பு தொகு

‘த ஹார்ட்ஃபுல்னெஸ் வே’ புத்தகத்தின் வெளியீடு மற்றும் விமர்சனங்கள் பல்வேறு முன்னணி செய்தித்தாள்கள் & பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இந்துஸ்தான் டைம்ஸின் நீல்சன் சிறந்த கற்பனையல்லாத இந்திய புத்தகங்கள் பட்டியலின் முதல் பத்து புத்தகங்கள் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்புத்தகம் ஜூன் 1, 2018 அன்று, அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு, வெகுசீக்கிரமே பார்ன்ஸ் & நோபிலில் அந்நாட்டின் சிறந்த விற்பனை புத்தகமானது, அமேஸானில் அதிகம் விற்ற புத்தகமானது. அதன் விமர்சனங்கள் பல சர்வதேச பத்திரிகைகளிலும் / பதிப்புகளிலும் வெளிவந்துள்ளது.

ராஜஸ்தான் முதல் மந்திரி, வசுந்தரா ராஜே, தனது டிவிட்டர் பக்கத்தில், “இதயத்தால் & இதயத்திலிருந்து ஆன்மீகப் வழியில் வாழ்வதென்பதைக் குறித்த சுவாரஸ்யமான உட்பார்வையை இப்புத்தகம் வழங்குகிறது,’’ என்று குறிப்பிட்டுள்ளார். மாயின் கஸி என்ற இஸ்லாமிய ஆராய்ச்சியாளர், “இப்புத்தகம் அதன் தனித்தன்மையான அனுகுமுறையில் தனித்து நிற்கிறது.” என்று ‘ஏசியன் ஏஜ்’ செய்தித்தாள் விமர்சனத்தில் கூறியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_ஹார்ட்ஃபுல்னெஸ்_வே&oldid=3525215" இலிருந்து மீள்விக்கப்பட்டது