நகர அருங்காட்சியகம், ஐதராபாத்து

இந்தியாவிலுள்ள தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்து நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் அருங்காட்ச


நகர அருங்காட்சியகம் (City Museum) இந்தியாவிலுள்ள தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் அமைந்திருக்கும் ஓர் அருங்காட்சியகமாகும். பூரணி அவேலி அரண்மனையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது[1][2].

வரலாறு

தொகு

2012 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11 ஆம் நாள் நகர அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. ஐதராபாத்தை ஆட்சிபுரிந்த கடைசி மன்னரான மிர் உசுமான் அலிகானின் பெயரனும், நிசாம் மணிமண்டப அறக்கட்டளையின் தலைவருமான இளவரசர் முஃபாகாம் யாக் அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்தார்[3].

அருங்காட்சியகம்

தொகு

கற்கால பானைகள், பெருங்கற்கால தளங்கள், ஐரோப்பிய வகை சிலைகள், சாதவாகன காலத்திய நாணயங்கள் மற்றும் பல தொல்பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு