நங்கூரம்
நங்கூரம் (ஆங்கிலம்:anchor) என்பது நீரில் செல்லும் நீரூர்திகளை நகராமல் நிறுத்த இடப்படுகின்ற சாதனமாகும். இலத்தின் மொழியில் அன்கோரா என்ற சொல் பிற்காலத்தில் ஆன்கர் என்ற மாறியது. பண்டைக் காலத்தில் பெரிய கற்கள், மணல் மூட்டைகள் போன்றவை இதற்காப் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் இரும்பினால் ஆன நங்கூரம் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]