நசீருத்தீன் சா ஆக்டர்- இ சினிமா (திரைப்படம்)
நசீருத்தீன் சா ஆக்டர்- இ சினிமா (Nasseroddin Shah Actor-e Cinema ) எனும் பாரசீக மொழித் திரைப்படம் ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கியது. இத்திரைப்படம் ஒன்ஸ் அப்பான் அ டைம், சினிமா (Once Upon a Time, Cinema) எனும் ஆங்கிலப் பெயருடன் வெளியானது. இத்திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை எழுதி இயக்கியவர் மோசன் மக்மால்பஃப் ஆவார்.
நசீருத்தீன் சா ஆக்டர்- இ சினிமா | |
---|---|
இயக்கம் | மோசன் மக்மால்பஃப் |
தயாரிப்பு | முகம்மது மெஹ்தி |
கதை | மோசன் மக்மால்பஃப் |
நடிப்பு | எஸ்ஸாதோலா என்திஸாமி, மெஹ்தி ஹாஸிமி |
படத்தொகுப்பு | மோசன் மக்மால்பஃப் |
ஓட்டம் | 90 நிமிடங்கள் |
நாடு | ஈரான் |
மொழி | பாரசீக மொழி |
திரைப்படத்தைப் பற்றி
தொகுஇது ஒரு நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பழைய ஈரானியத் திரைப்படங்களின் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இது கருப்பு- வெள்ளைத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படம் 1991 ஆம் ஆண்டில் வெளியானது.
விருதுகள்
தொகுஇத்திரைப்படம்,
- இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா விருது
- கார்ல்வி வேரி (Karlovy Vary) சர்வதேச திரைப்பட விழா விருது [1]
ஆகிய இரு விருதுகளைப் பெற்றது.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Once Upon a Time, Cinema". Makhmalbaf Film house. Archived from the original on மே 1, 2006. பார்க்கப்பட்ட நாள் April 28, 2006.