நடிக்கும் பேய்க்கணவாய்

(நடிக்கும் எண்காலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நடிக்கும் பேய்க்கணவாய்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Thaumoctopus

இனம்:
T. mimicus
இருசொற் பெயரீடு
Thaumoctopus mimicus
Norman & Hochberg, 2005[1]

நடிக்கும் பேய்க்கணவாய் (ஆங்கிலம்: Mimic octopus) என்பது மற்ற உள்ளூர் இனங்களைப் போல ஆள்மாறக்கூடிய இந்திய-பசிபிக் இன பேய்க்கணவாய் ஆகும். இவை இருக்கும் சூழலோடு கலப்பதற்காக தங்களின் தோல் நிறம் மற்றும் அமைப்பு போன்றவற்றை மாற்றிக்கொள்ளக் கூடியதில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இந்த சாக்குக்கணவாய் பல்வேறு பொருள்கள் மற்றும் விலங்குகளின் வடிவத்தை எடுத்துக் கொள்ளும் தனித்துவமான பண்பைக் கொண்டுள்ளது. [2] இவ்வாறு தம்மை கடற்குதிரை, சொறி மீன், கடல் பாம்பு, திருக்கை போன்ற 15 க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொள்வதாக அறியப்படும் ஒரே கடல் உயிரினம் இது மட்டுமே ஆகும். பல விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காகவோ அல்லது மிரட்டவோ உருமாற்றம் செய்கின்றன. ஆனால் எதிரியை வேட்டையாடும் பொருட்டு பல்வேறு வடிவங்களை எடுப்பது இந்த உயிரினமே ஆகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Norman, M.D.; and Hochberg, F.G. (2005). "The 'mimic Octopus' (Thaumoctopus mimicus n. gen. et sp.), a new octopus from the tropical Indo-West Pacific (Cephalopoda: Octopodidae)." Molluscan Research 25: 57–70.
  2. Maculay, G. (January 6, 2012). "Mimic Octopus Creature Feature - Diving with Mimics". Dive The World - Scuba Diving Vacations - Dive Travel - Diving Holidays - Liveaboards. Retrieved April 21, 2013.
  3. Harmon, K. (February 21, 2013). "Mimic Octopus Makes Home on Great Barrier Reef". Scientific American. Retrieved April 21, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடிக்கும்_பேய்க்கணவாய்&oldid=3313707" இலிருந்து மீள்விக்கப்பட்டது