நடிப்பு விளையாட்டு
நடித்துக்கொண்டே பாடுவதும், உரையாடல்கள் நிகழ்த்துவதும் நடிப்பு விளையாட்டு. இதனை சிறுவர்களும் சிறுமியரும் விளையாடுவர்.
- சிறுமியர்
- தண்ணீர் சேந்துகிறது
- பாடல்
- தண்ணீர் சேந்தி, தண்ணீர் சேந்தி,
- குடத்திலே ஊற்று
- பூப் பறித்து, பூப் பறித்து
- கூடையிலே போடு
- பூ விற்று, பூ விற்று
- பெட்டியிலே போடு
இப்படி இசையுடன் பாடிக்கொண்டே அவரவருக்குத் தெரிந்ததையெல்லாம் செய்துகாட்டுவர்.
- சிறுவர்
- உழுது உழுது
- விதையை ஊன்று
- நெல் அறுத்து, நெல் அறுத்து
- கட்டுக்கட்டு
இப்படி அவரவருக்குத் தெரிந்த செயலையெல்லாம் சொல்லிக்கொண்டே செய்துகாட்டுவர்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954