நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)

நடுக்கள வீரர் என்பவர் காற்பந்துச் சங்கம் விளையாட்டில் ஒரு நிலையாகும். பொதுவான பெயர் காரணம், இந்த நிலையில் இருந்து விளையாடும் வீரர் தடுப்பாட்ட வீரருக்கும் முன்கள வீரருக்கும் நடுவில் நின்று களத்தில் விளையாடுவதால் நடுக்கள வீரர் என்ற பெயர் கிடைத்தது. எத்தனை நடுக்கள வீரர்கள் ஒரு அணியில் வேண்டும் என்பதை அந்த அணியை உருவாக்கும் போது முடிவுசெய்யப்படும். அதுமட்டும்மில்லாமல் நடுக்கள வீரர் களத்தில் எந்த நிலையில் இருந்து விளையாடுவது என்பதையும் தீர்மானிப்பர். நடுக்கள வீரர் பின்வரும் நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் நின்று விளையாடுவார். மைய நடுக்கள வீரர், அகல நடுக்கள வீரர், தடுப்பாட்ட நடுக்கள வீரர், தாக்கும் நடுக்கள வீரர் ஆகிய நான்கு நிலைகள் உள்ளது.