நடுக்குப்பம்

நடுக்குப்பம் (Nadukuppam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கோட்டக்குப்பம் பேரூராட்சியைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். இந்த அழகிய கிராமம் மத்திய மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து சுமார் 145 கிலோமீட்டர் தெற்கில் உள்ளது. ஊரின் வாசலில் மேகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. வடக்கு புறம் மற்றும் தெற்கு புறம் சிறிய கடற்கரை அமைந்துள்ளது. ஊர் மக்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசால் கடந்த 2004கில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. அதன் அளவு 400 மீட்டர். நடுக்குப்பத்திலுள்ள மொத்த குடுபங்களின் எண்ணிக்கை 320. இந்த கிராமம் வானூர் வட்டத்துக்கு உட்பட்ட கோட்டக்குப்பம் பேரூராட்சியின் ஏழாவது வார்டு வாக்காளர்களில் சுமார் எழுபது சதவீத மக்கள் இங்கு உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுக்குப்பம்&oldid=2756537" இலிருந்து மீள்விக்கப்பட்டது