நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்
நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில் (ஆங்கில மொழி: Nadupalani Maragatha Dhandayuthapani Temple) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேல்மருவத்தூர் பகுதிக்கு அருகிலுள்ள அச்சரப்பாக்கம் புறநகர்ப் பகுதியின் பெருக்கரணை கிராமத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[2][3] சுமார் மூன்றடி உயரமுள்ள மரகதக் கல்லாலான மூலவர் தண்டாயுதபாணி இக்கோயிலில் அருள்பாலிக்கிறார்.[4] பழனி மலை தண்டாயுதபாணி மூலவரைப் போலவே இக்கோயிலின் மூலவரும் காட்சியளிக்கிறார்.[5] காஞ்சிப் பெரியவர் இக்கோயிலுக்கு விஜயம் செய்து, நடுபழனி என்ற திருநாமத்தை இத்தலத்திற்கு சூட்டியுள்ளார்.[6] 2022ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14ஆம் நாள் இக்கோயிலுக்கு கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது. வேம்பு மற்றும் அரச மரங்கள் இத்தலத்தின் விருட்சங்களாகும். சுமார் 45 அடி உயரமுள்ள முருகன் சிலை ஒன்று இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°23′03″N 79°52′20″E / 12.3842°N 79.8721°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | நடுபழநி |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | காஞ்சிபுரம் மாவட்டம் |
அமைவிடம்: | பெருக்கரணை, அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர் |
ஏற்றம்: | 99 m (325 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | தண்டாயுதபாணி |
சிறப்புத் திருவிழாக்கள்: | கந்தசஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம்[1] |
வரலாறு | |
கட்டிய நாள்: | சுமார் 40 வருடங்கள் தொன்மையானது |
அமைத்தவர்: | முத்துசாமி சித்தர் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 99 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°23′03″N 79°52′20″E / 12.3842°N 79.8721°E ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "Dhandayuthapani Murugan Temple – History, Legend, Architecture & Festivals". Astroved Astropedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ மாலை மலர் (2018-11-10). "நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில் - காஞ்சீபுரம்" (in ta). https://www.maalaimalar.com/devotional/temples/2018/11/10065249/1212180/nadupalani-dandayuthapani-murugan-kovil.vpf.
- ↑ "Visit Temples : Best Website for Visiting Temples in India". www.visittemples.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "VELUDHARAN's TEMPLES VISIT : Nadupalani Sri Maragatha Dhandayuthapani, Nadupalani, Villupuram District, Tamil Nadu". VELUDHARAN's TEMPLES VISIT. 2012-02-13. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
- ↑ "நன்மையருளவான் நடுபழனி நாயகன் - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.