நடுவண் உப்பு மற்றும் கடல்சார் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்
நடுவண் உப்பு மற்றும் கடல்சார் வேதிகள் ஆராய்ச்சி நிறுவனம் (முன்னர் நடுவண் உப்பு ஆராய்ச்சி நிறுவனம்) அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின்(சிஎஸ்ஐஆர்) உறுப்பு ஆய்வகம் ஆகும் [1]. இந்நிறுவனம் நாட்டின் முன்னாள் முதன்மை அமைச்சரனா ஜவஹர் லால் நேரு அவர்கள் 10 ஏப்ரல் 1954 அன்று குஜராத்தில் பாவ்நகரில் துவங்கி வைக்கப்பட்டது[2].
தற்போது அறி. கண்ணன் சீனிவாசன் இந்நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இந்நிறுவனத்தின் ஒரு பகுதி கிளை ஆய்வகம், தமிழகத்தின் இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் எனும் இடத்தில் கடற்பாசிகளை கொண்டு ஆராய்ச்சி செய்ய அமைக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம்
தொகு- செடியின வழி உருவகித்த ஊட்டச்சத்து மிகு உப்பு
- உள்ளக உப்புநீக்கும் மின்னாற்பகுப்பு அமைப்பு
- சிறப்பு அயோடினாக்கம்
- "கிளின் ரைட்" எழுதவுதவும் சுண்ணாம்பு
- செடியின வழி உருவகித்த சொடியம் குறைந்த உப்பு
- நெகிழி துணுக்கு மின்முனைகள்
ஆராய்ச்சி செயல்பாடு
தொகு- நேரயனிகள்/எதிரயனிகள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து அடையாளம் காணும் மூலக்கூறு உணரிகள்
- பகுப்பு (அனலைட்ஸ்) மற்றும் நடுநிலை (நியூட்றல்) மூலக்கூறுகளை மெய் கட்டுபாடுகளில் கண்டறிதல்
- உலோக ஆழ்மூலக்கூற் அணைமங்களை கொண்டு ஒளி-தூண்டும் ஆற்றல்/மின்னணு பரிமாற்றும் முறைகளை ஆய்தல்
- நானோப்படிக சாய உணர்த்திறன் கொண்ட கதிரவ அணுகள்
- திறங்கொண்ட பொருட்கள்
- பசுமை வேதியியல்
- பன்படி (பாலிமெர்) வேதியியல் மற்றும் தனிசிறந்த மருந்து கொண்டு சேர்த்தல் அமைப்பு
- மருந்து உயிரித்தொழில்நுட்பம் மற்றும் இயற்கை விளைப்பொருட்கள்
- உயர்மதிப்பு உலோக அயனிகளை இயற்கை மூலங்களிலிருந்து மீட்டெடுத்தல்
- படிமக பொறியியல்
- கணிமை ஆய்வு
- மின்வேதியல்/வேதியல் மதிப்பு கூட்டு முறைகள்
- பாலியெத்திலின் சார்ந்த இடை பன்படி படலங்கள் மற்றும் மினூடுபகுப்பு (எலெக்றோ-டையாலிஸிஸ்) போன்றவற்றை வளர்த்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of CSIR laboratories and their important research programmes" (PDF). csirhrdg.nic.i. Archived from the original (PDF) on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
- ↑ "Genesis of CSMCRI". csmcri.org. Archived from the original on 23 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.