நடைமுறைப்படி

டெ ஃபேக்டோ (De facto) அல்லது நடைமுறைப்படி என்ற சட்ட வழக்குச்சொல் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்[1]. இதன் பொருள் நடப்பு வழக்கத்தின்படி என்பதாகும். இது பொதுவாக சட்டம், அரசமைப்பு, விதிமுறை தொடர்பில் சட்டப்படி என்பதற்கு மாறாகப் பயன்படுத்தப்படுகிறது. சட்டப்படி என்பது இயற்றப்பட்ட சட்டவிதிமுறைகளில் வரையறுக்கப்பட்டவாறு நிறுவப்பட்டது எனவும் நடைமுறைப்படி என்பது நிலவும் வழக்கங்களுக்கொற்ப நிறுவப்பட்டது எனவும் பொருள்படும்.

இவற்றிற்கான எடுத்துக்காட்டாக, பில் கிளின்டனின் சட்டப்படியான பெயர் வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன். இதுவே அலுவல்முறை ஆவணங்களில் புழங்கும் பெயராகும். இவரது நடைமுறைப்படியான பெயர் அவரை அனைவரும் அழைக்கும் பில் கிளின்டனாகும்.

மேற்சான்றுகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நடைமுறைப்படி&oldid=2718532" இருந்து மீள்விக்கப்பட்டது