நட்சன் எண்
நட்சன் எண் (Knudsen number-'Kn') என்பதொரு பரிமாணமற்ற எண்ணாகும். இது ஒரு மூலக்கூறின் சராசரி மோதலிடைத் தொலைவுக்கும் எடுத்துக்கொள்ளப்படும் ஏதேனுமொரு அளவீட்டுக்குமுள்ள (உதாரணமாக, பாய்மத்திலிருக்கும் ஒரு பொருளின் ஆரம்) விகிதமாகும். டென்மார்க்கைச் சேர்ந்த இயற்பியலாளரான மார்டின் நட்சன் (1871-1949) என்பாரின் பெயரில் இது வழங்கப்படுகிறது.
வரையறை
தொகுநட்சன் எண் பரிமாணமற்ற எண்ணாகும். அது கீழ்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
இங்கு,
- = சராசரி மோதலிடைத் தூரம் [L1]
- = எடுத்துக்கொள்ளப்படும் அளவீட்டு நீளம்[L1].
ஒரு நல்லியல்பு வளிமத்துக்கு சராசரி மோதலிடைத் தூரத்தை எளிதில் கணக்கிடலாம். எனவே,
இங்கு,
- என்பது போல்ட்சுமேன் மாறிலி (1.3806504(24) × 10−23 J/K in SI units), [M1 L2 T−2 θ−1]
- என்பது வெப்பயியக்கவியல் வெப்பநிலை, [θ1]
- என்பது துகள் விட்டம், [L1]
- என்பது மொத்த அழுத்தம், [M1 L−1 T−2].
வளிமண்டலத்தில் துகள் இயக்கவியலுக்கு, மற்றும் திட்ட வெப்ப அழுத்த அனுமானத்தில், அதாவது 25 °C மற்றும் 1 atm, ≈ 8 × 10−8 m.