நட்டாங்கண்டல்

நட்டாங்கண்டல் என்பது இலங்கையின் வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நட்டான்கண்டல் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இங்குள்ள மக்கள் பிரதானமாக விவசாயத்தை நம்பி வாழ்வதுடன், அனேகமானோர் அரச நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இங்கு நட்டாங்கண்டல், உழுவனேரி, எருவில் ஆகிய சிறிய குளங்கள் காணப்படுகிறது. அத்துடன் அரச நிறுவனங்களான வைத்தியசாலை, பாடசாலை, தபால் நிலையம் ஆகியனவும் காணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்டாங்கண்டல்&oldid=3900351" இலிருந்து மீள்விக்கப்பட்டது