நண்டு இறைச்சி
நண்டு இறைச்சி (Crab meat) என்பது நண்டில் இருந்து கிடைக்கும் இறைச்சி உணவாகும். நண்டு இறைச்சி உலகம் முழுவதும் சமைக்கப்படுகிறது.
உணவுக்காண நண்டின் சில வகைகள்
தொகு- களி நண்டு
- சிலுவை நண்டு
- ஓலை கால் நண்டு
- ஈர்ப்புள்ளி நண்டு
- முக்கண் நண்டு
- கோரவளை கழி நண்டு
வாழ்விடம்
தொகுஏரி , குளம் , கடல் கரை,, உப்பளங்கள் மற்றும் சதுப்பு நில காடுகள்
அளவு & எடை
தொகுநன்கு வளர்த்த நண்டுகள் 20 செ .மீ நீளமிருக்கும் . ஆண் நண்டுகள் 1.5 முதல் 2.0 கிலோ வரை எடை இருக்கும்.
சுவை
தொகுநண்டு மிகவும் சுவையானது. இன முதிர்ச்சி பெற்ற பெண் நண்டுகள் சுவை அனைவராலும் ஈர்க்க படுகிறது
நண்டில் உள்ள சத்துக்கள்
தொகு9 விழுக்காடு புரதமும், 1 விழுக்காடு கொழுப்பும், 3.2 விழுக்காடு தாதுப்பொருட்களும், 3.3. விழுக்காடு மாவுச்சத்தும், 50 கலோரி ஏரிசக்தியும் உள்ளது. மேலும் வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், தாமிரம் , ஐயோடின், மெக்னிசியும் ஆகியவை உள்ளன
மருத்துவ குணம்
தொகுஆஸ்துமா மற்றும் சளி ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும். புத்துணர்ச்சி தரும் உணவாகவும் சக்தி நிறைந்த உணவாகவும் உள்ளது. நண்டு சூப் சளியை முறிக்கும் மருந்தாகவும் படுகிறது [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ மீன்வளப் பூக்கள் -- முனைவர் வெ .சுந்தரராஜ்