நதாராம் சர்மா கவுர்

நதாராம் சர்மா கவுர் (Natharam Sharma Gaur) (1874-1943) நௌடங்கி (வட இந்தியாவின் ஓபராடிக் தியேட்டர்) நாடகங்களின் எழுத்தாளரும் கலைஞரும் ஆவார். இது இப்போது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அத்ராஸின் இந்தர்மன் அகாராவின் நாடகங்கள் ஆகும்.[1][2]  – நௌடங்கி நாடகம் வாழ்க்கையை விடப் பெரியதாக இருந்தது. பாலிவுட் ஆடம்பரங்களுக்கு முன்னோடியாக, இது கவர்ச்சியும் தூய கற்பனையும் நிறைந்த உலகமாக இருந்தது. பாடல், நடனம், காதல் மற்றும் உணர்ச்சி நிறைந்த பல நாடகங்களை அள்ளிக் கொடுத்தன. இந்த வகையில் நிகழ்த்தப்பட்ட பிரபலமான நாடகங்களில் தனது வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக செல்வம், ராஜ்யம், மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுக்கொடுத் ராஜா அரிச்சந்திரா போன்ற வரலாற்று நாயகர்கள் திரண்டிருந்தனர்.

நதாராம் சர்மா கவுர்
பிறப்பு(1874-01-14)14 சனவரி 1874
தரியாபூர், ஹாத்ரஸ், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு7 திசம்பர் 1943(1943-12-07) (அகவை 69)
ஆக்ரா, பிரித்தானியாவின் இந்தியா (தற்போதைய ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா)
தொழில்எழுத்தாளர், கலைஞர்
மொழிஇந்தி
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அமர் சிங் ரத்தோர், சுல்தானா டாகு, உடல் கா பியா, சங்கீத் அரிச்சந்திரா, வீராங்கனா வீர்மதி

தொடக்க கால வாழ்க்கை

தொகு

நதாராம் 1874 ஜனவரி 14 அன்று அத்ராசு மாவட்டத்தில் உள்ள தரியாபூர் கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது பார்வையற்ற தந்தையான பாகீரத்மலுக்கு வழிகாட்டி, பிச்சைக்காக பாடும் குழந்தையாக அத்ராசுக்கு வந்தார்.[3] அவரது இனிமையான குரலும் அழகான முகமும் அத்ராசின் இந்தர்மன் அகாராவின் சீடர்களில் ஒருவரான சிரஞ்சிலாலின் கவனத்தை ஈர்த்தது. நதாராம் அகாராக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்பார். அங்கு இவர் வாசிப்பு மற்றும் எழுத்துடன் பாரம்பரிய இசை மற்றும் நடனம் கற்றுக்கொண்டார். நதாராம் மிகக் குறுகிய காலத்தில் கலையில் தேர்ச்சி பெற்று தனது குழுவின் நட்சத்திரமாக ஆனார். பின்னர், இவர் தனது சொந்தக் குழுவை உருவாக்கி 'ஷியாம்' என்ற அச்சகத்தைத் தொடங்கினார். நதாராம் வட அமெரிக்கா, இந்தோனேசியா, மொரீசியஸ் மற்றும் மியான்மரில் தனது நாடகங்களை நிகழ்த்தினார். ரங்கூனில் பலர் நதாராமின் நாடகங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரே நோக்கத்திற்காக இந்தியைக் கற்றுக்கொண்டனர்.

தொழில் வாழ்க்கை

தொகு

1897 முதல் 1940 வரை 113 நாடகங்களை நதாராம் எழுதினார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Oxford reference". பார்க்கப்பட்ட நாள் 5 August 2020.
  2. Pande, Mrinal (2013-01-11). "History | Nautanki nation". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-05.
  3. "हाथरस के नथाराम ने दुनियाभर में बजाया स्वांग का डंका". பார்க்கப்பட்ட நாள் 5 August 2020.
  4. "Natharam and the Indarman Akhara of Hathras: 1892-1920". பார்க்கப்பட்ட நாள் 5 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதாராம்_சர்மா_கவுர்&oldid=4112953" இலிருந்து மீள்விக்கப்பட்டது