நதிரா (பாக்கித்தானிய நடிகை)

பாகிஸ்தானிய நடிகை

நதிரா (Nadira, 22 நவம்பர் 1968 - 6 ஆகத்து 1995) என்பவர் ஒரு பாக்கித்தான் திரைப்பட நடிகையும், நடனக் கலைஞரும் ஆவார்.[1] 1986 ஆம் ஆண்டில் திரையுலகில் நுழைந்த இவர் பஞ்சாபி மொழி திரைப்படமான "அக்ரி ஜாங்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் முக்கியமாக பஞ்சாபி மற்றும் உருது படங்களில் நடித்துள்ளார்.[2]

வாழ்க்கை

தொகு

இவர் 1968 இல் பாக்கித்தானில் உள்ள லாகூரில் "மல்லிகா பரா" என்ற இயற்பெயருடன் பிறந்தார்.[3] 1993 ஆம் ஆண்டில், இவர் மாலிக் ஐஜாஸ் உசேன் என்ற தங்க நகை வியாபாரியை மணந்தார்.[4] இவர்களுக்கு மூத்த மகள் "உரூபாப்" மற்றும் இளைய மகன் "ஐதர் அலி" என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.[3] நதிரா திருமணத்திற்குப் பிறகு நடிப்பை விட்டுவிட்டார்.[3]

தொழில்

தொகு

திரைப்பட இயக்குநர் யூனுசு மாலிக் 1986 ஆம் ஆண்டில் தனது "அக்ரி ஜாங்" திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தை வழங்கியதின் மூலம் இவரை பாக்கித்தான் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.[5] நதிராவின் முதல் படம் "அக்ரி ஜாங்" (கடைசிப் போர்), ஆனால் இயக்குநர் அல்தாஃப் உசேனின் பஞ்சாபி திரைப்படமான "நிசான்" (மார்க்) முதலில் வெளியிடப்பட்டது, ஆகவே, பதிவின் படி, நிசான் என்ற படமே இவரது முதல் படமானது[3][6]

நதிரா திறமையான நடிகையாக கருதப்பட்டார். "நாச்சே நாகின்" என்றப் படத்தில் அவர் தனது வாழ்க்கையின் சிறந்த பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில், அவர் முதல் முறையாக ஒரு பாம்பு வேடத்தில் நடித்தார். இதனால் இவருக்கு அதிக புகழ் கிடைத்தது. பின்னர் பல படங்களில் அவர் பாம்பு வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். அவர் "நாச்சே நாகின்", "நாச்சே ஜோ" மற்றும் "ஜாதூ கார்னி" ஆகிய படங்களில் தொடர்ச்சியாக பாம்பு வேடங்களில் நடித்தார்.[3]

நதிரா 52 படங்களில் நடித்துள்ளார். அதில் 25 திரைப்படங்கள் வெள்ளி விழாவையும் [nb 1] நான்கு திரைப்படங்கள் வைர விழாவையும்[nb 2] கண்டது. மற்றும் "அக்ரி ஜாங்" என்ற திரைப்படம் தங்க விழாவை கண்டது. [nb 3] அவர் திரையுலகில் "வெள்ளை ரோஜா" என்று அறியப்பட்டார். மேலும் அவர் ஒரு நல்ல நடனக் கலைஞராகவும் கருதப்பட்டார். அவரது திரைப்பட வாழ்க்கையில் அவர் இரண்டு உருதுத் திரைப்படங்கள், 35 பஞ்சாபி திரைப்படங்கள், 2 பாஷ்டோ மொழித் திரைப்படங்கள் மற்றும் பஞ்சாபி / உருது ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்த 14 படங்களிலும் நடித்துள்ளார்.[3]

இறப்பு

தொகு
 
நதிராவின் கல்லறை, மியானி சாஹிப் கல்லறை, லாகூர்

1995 ஆகத்து 6 அன்று லாகூரின் குல்பெர்க் அருகே நதிரா அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2] நதிரா ஒரு உணவகத்தில் இருந்து தனது கணவருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது கொள்ளையர்க ஒருசிலர் அவரது வாகனத்தை நிறுத்தி வாகனச் சாவியைப் பறிக்க முயன்றனர். நதிராவின் கணவரிடமிருந்து வந்த எதிர்ப்பு கொள்ளையர்களிடமிருந்து துப்பாக்கிச் சூடு நடத்த வழிவகுத்தது. முன் இருக்கையில் இருந்த நதிராவின் கழுத்தில் ஒரு குண்டு மோதியது, அதனால் இவர் கொல்லப்பட்டார். நதிராவின் கணவர் மீது கொலை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் விசாரணைகள் நதிராவின் கணவரை கொலைக் குற்றவாளியென நிரூபிக்க முடியவில்லை.[4]

குறிப்பு

தொகு
  1. A silver jubilee film is one shown continuously in cinemas in one city for 25 weeks.
  2. A diamond jubilee film is one shown continuously in cinemas in one city for 60 weeks.
  3. A golden jubilee film is one shown continuously in cinemas in one city for 50 weeks.

மேற்கோள்கள்

தொகு
  1. Awan, M. Saeed (26 October 2014). "The dark side of Lollywood". DAWN.COM.
  2. 2.0 2.1 "اداکارہ نادرہ کی 22ویں برسی آج منائی جائیگی". Nawaiwaqt. 6 August 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Faiz, Raja (3 August 2018). "Haseen o Jameel......Nadira" [Nymphish......Nadira]. Nigār (in உருது). Karachi.
  4. 4.0 4.1 Gul, A. R. (September 2009). "14 Saal Beet Gaye Qatil Be Naqab Nahi Ho Paya" [The murderer has not been identified since 14 years]. Super Star Dust, Monthly (in உருது). Karachi. p. 244.
  5. "لالی وڈ کی 'جٹیاں'". jang.com.pk.
  6. "خوبرو اداکار نادرہ کی برسی". Dawn News. 7 August 2014.