நத்தனியேல் (இயேசுவின் சீடர்)

நத்தனியேல் என்பவர் இயேசுவின் சீடர்களில் ஒருவர் ஆவார். இவர் கலிலேயாவில் உள்ள கானா ஊரை சேர்ந்தவர்.

நத்தனியேல், பிலிப்பு

இயேசுவின் மற்றோரு சீடரான பிலிப்பு என்பவர் நாத்தான்வேலிடம் வந்து நாங்கள் மோசேயும் மற்ற தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம். அவர் நாசரேத்தூரானுமாகிய இயேசு தான் என்றான். ஆனால் நாத்தான்வேல் மேசியா நாசரேத் ஊரிலிருந்து வருவார் என்பதை அவன் நம்பிக்கை கொள்ளவில்லை. யூத வரலாற்றில் நாசரேத் ஊரில் இருந்து எந்த ஒரு தீர்க்கதரிசிகளும் எழும்பினது இல்லை. இதனால் நாத்தான்வேல் பிலிப்பு சொன்னதை ஏற்க மறுத்தான். பிலிப்பு நாத்தான்வேலிடம் நீ வந்து பார் என்று அழைத்ததின் நிமித்தம் அவன் இயேசுவை பார்ப்பதற்கு சென்றான். இயேசு நாத்தான்வேலை தம்மிடத்தில் வரக்கண்டு கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். நாத்தான்வேல் இயேசுவிடம் என்னை உமக்கு எப்படி தெரியும் என்றான். அதற்கு இயேசு பிலிப்பு உன்னை அழைக்கும் முன்பே அத்திமரத்தின் கீழே உன்னை கண்டேன் என்றார். பின்பு நாத்தான்வேல் இயேசுவை நீர் தேவனுடைய மகன், இசுரவேலின் அரசன் என்றான்.[Note 1][Note 2][1]

திருமறையில் யோவான் புத்தகத்தில் மட்டும் இரு இடங்களில் இவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யோவான் அதிகாரம் 1 மற்றும் 21. நற்செய்தி புத்தகங்கள் என்று அழைக்கப்படும் நான்கு புத்தகங்களில் மற்ற மூன்று புத்தகத்தில் இவரை பற்றிய குறிப்புகள் இல்லை.

மத்தேயு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரெண்டு சீடர்களில் பற்தொலொமேயு என்பவர் தான் நாத்தான்வேல் என்ற யூகங்களும் உண்டு. அனால் அதற்கான சரியான ஆதாரங்கள் கிடையாது.

மேற்கோள்கள்

தொகு


பிழை காட்டு: <ref> tags exist for a group named "Note", but no corresponding <references group="Note"/> tag was found