நத்தம் நிலம்

கிராமத்தில் குடியிருப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிலம்

நத்தம் நிலம் என்பது தமிழக வருவாய்த் துறை, கிராமப்புற நிலங்கள் தொடர்பான ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்றாகும். நத்தம் என்ற சொல்லுக்கு குடியிருப்பு பகுதி எனப்பொருள். கிராம நத்தம் என்றால், கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலமாகும். நத்தம் புறம்போக்கு நிலம் எனில், நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் ஆகும்.

வரலாறு

தொகு

வேளாண் நிலங்களை நஞ்சை, புஞ்சை, மானாவாரி, தரிசு என வகைப்படுத்திய பிரித்தானிய இந்திய ஆட்சியினர் கிராமப்புற குடியிருப்புகளை, 'நத்தம்' என்ற பெயரில் வகைப்படுத்தினர். கிராமக் குடியிருப்புகளை சுற்றிலும் இருக்கும் காலியிடங்களும், எதிர்கால தேவைக்காக 'நத்தம்' என்றே வகைப்படுத்தப்பட்டன. பிரித்தானிய இந்தியாவில்1920-இல் நகரமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் 1860ம் ஆண்டு முதலே, கிராமப்புறங்களில் நத்தம் குடியிருப்பு போன்ற சொற்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. 1863 மற்றும் 1912-ஆம் ஆண்டு கிராமப்புற நில ஆவணங்களில் நத்தம் என்ற சொல்லாட்சி பயன்பாட்டில் பதிவாகியுள்ளது.[1]

கிராமப்புறங்களில் இருக்கும் நத்தம் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்க வேண்டும். ஆண்டுதோறும் நத்தம் நிலங்கள் தொடர்பாக ஏற்படும் மாறுதல்களை பதிவேட்டில் பதிய வேண்டும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 'நத்தம்' தெரியும் பொருள் தெரியுமா?
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தம்_நிலம்&oldid=3836820" இலிருந்து மீள்விக்கப்பட்டது