நந்தனி ஆறு

இந்திய ஆறு

நந்தனி ஆறு (Nandani River) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள சாத்தாரா மாவட்டத்தில் பாயும் ஓர் ஆறாகும். இயெர்லா ஆற்றின் வலது துணை நதியான இது . செய்கானில் உருவாகி அவுந்து நகரத்தில் பாய்கிறது.. பின்னர் மகாராட்டிரா மாநிலத்தின் சாங்லி மாவட்டத்தில் உள்ள கடேகான் தாலுகாவின் சிவ்னாய் கிராமத்திற்கு அருகில் இயேரலா ஆற்றில் சங்கமிக்கிறது. [1]

நந்தனி நதி
Nandani River
சாங்லி மாவட்டத்தின் கடேகான் தாலுகாவில் நட்னே ஆற்றின் மீது அமர்பூர் பாலம்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
பகுதிமேற்கு மகாராட்டிரம்
மாவட்டம்சாத்தாரா, சாங்கிலி
சிறப்புக்கூறுகள்
மூலம்செய்கௌன் ஔத்திற்கு அருகில்
 ⁃ அமைவுகட்டாவ் தாலுக்கா, சாத்தாரா, மகாராட்டிரம், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்17°57′07″N 74°24′37″E / 17.95194°N 74.41028°E / 17.95194; 74.41028
 ⁃ ஏற்றம்914 m (2,999 அடி)
முகத்துவாரம்இயேரலா நதி
 ⁃ அமைவு
சிவானி, கடேகான் தாலுக்கா, சாங்கிலி, மகாராட்டிரம், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
17°25′18″N 74°42′00″E / 17.42167°N 74.70000°E / 17.42167; 74.70000

இந்தியாவின் கிருட்டிணா நதிப் படுகையின் துணை நதியான மேல் இயேரலா நதிப் படுகையில் நந்தனி ஆற்றுப் படுகை அமைந்துள்ளது. நந்தனி நதியின் மொத்த நீளம் 39 கி.மீ. ஆகும். இது சதாரா மாவட்டத்தில் உள்ள செய்கானில் இருந்து 914 மீ கடல் மட்ட உயரத்தில் துவங்குகிறது. மகாராட்டிராவில் உள்ள சாங்லி மாவட்டத்தின் கடேகான் தாலுகாவில் உள்ள சிவானிக்கு அருகில் 551 மீ கடல் மட்ட உயரத்தில் சங்கமிக்கிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Nandani River. "Climate Change Impacts on Water Resources". Springer International Publishing. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Dry Spell and Wet Spell Characterization of Nandnai River Basin, Western Maharashtra, India". Springer International Publishing. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தனி_ஆறு&oldid=3777222" இலிருந்து மீள்விக்கப்பட்டது