நந்தா பிரசாத் அதிகாரி
நந்தா பிரசாத் அதிகாரி (Nanda Prasad Adhikari) ஒரு நேபாள குடிமகன் ஆவார். தனது மகனைக் கொன்றவர்களைக் கைது செய்யக் கோரி நேபாள அரசிடம் நீதி கேட்டு 11 மாத உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்தார்.[1]
நந்தா பிரசாத் அதிகாரி Nanda Prasad Adhikari | |
---|---|
பிறப்பு | 1961 அல்லது 1962 |
இறப்பு | 22 செப்டம்பர் 2014 |
தேசியம் | நேபாளம்i |
பணி | நூலாசிரியர் |
நேபாள மாவோயிசுட்டு மோதலின் போது, நந்தா பிரசாத் அதிகாரியின் மகனான கிருட்டிண பிரசாத் அதிகாரி, சித்வானில் இருந்து கடத்தப்பட்டார். இவர் 2004 ஆம் ஆண்டு சூன் மாதம் சித்வான் மாவட்டத்தில் உள்ள பகுலகர் சௌக்கில் கொல்லப்பட்டார்.[2] நந்த பிரசாத் தனது மனைவி கங்கா மாயாவுடன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து பிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தம்பதியரின் கோரிக்கை மற்றும் வேலை நிறுத்தம் தொடர்பாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தன.[3] ஆசிய மனித உரிமைகள் ஆணையம் நேபாள அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொண்டுவருமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கை விடுத்தது.[4]
தனது உண்ணாவிரதத்தின் 333 ஆவது நாளான 22 செப்டம்பர் 2014 அன்று பிர் மருத்துவமனையில் நந்தா பிரசாத் அதிகாரி தனது 52 ஆவது வயதில் இறந்தார்.[1][5]
நந்த பிரசாத்தின் மரணத்திற்குப் பிறகு, நேபாள அரசு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டது. நேபாளத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நந்த பிரசாத் அதிகாரியின் மரணம் மற்றும் கங்கா மாயாவின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Nanda Prasad Adhikari passes away". Ekantipur. Archived from the original on 2014-12-08. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
- ↑ "Nanda Prasad's battle for justice comes to an end". My Republica. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
- ↑ "HR Activists on Monitoring Mission For Adhikari Killing Investigation". INSEC. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
- ↑ "NEPAL:Justice for AdhikariCouple". Asian Human Right Commission. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
- ↑ "Nanda Prasad Adhikari passes away". Nepal News. Archived from the original on 2014-09-23. பார்க்கப்பட்ட நாள் 2014-09-23.
- ↑ "Adhikari died after refusing food, treatment: Govt". Nepal Republic Media. Archived from the original on 2014-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-24.
}