நந்தினி (செயற்பாட்டாளர்)

நந்தினி ஆனந்தன் (Nandhini Anandhan), தமிழ்நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளாக மது எதிர்ப்பு இயக்கத்தை நடத்திவரும் சட்டக்கல்லூரி மாணவியாவார். இவர் தனது தந்தையாருடன் இணைந்து மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது இடங்களில் விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகிறார். இவரது போராட்டங்களுக்காக, 2016 ஆம் ஆண்டு வரையான நிலவரப்படி, 55 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.[1][2][3][4][5][6][7].

மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம்

தொகு

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை முதல்வர் நேரில் சந்தித்து மீட்பு பணிகளை மேற்கோள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையிலுள்ள முதலமைச்சர் இல்லம் முன்பாக சட்டக்கல்லுாரி மாணவி நந்தினி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள முயன்றார். இதை அறிந்த காவல்துறையினர் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 7 அன்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.[8][9][10]

முக்கியமான போராட்டங்கள்

தொகு

நெல்லை கலெக்டரிடம் கந்துவட்டி கொடுமை தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது 2 குழந்தைகள், மனைவியுடன் இசக்கிமுத்து என்பவர் தீக்குளித்தார். இந்த படுகொலைக்கு காரணமான நெல்லை கலெக்டரை கைது செய்யக்கோரி மதுரை நந்தினி தந்தை ஆனந்தனுடன் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Anti-liquor crusader held in Madurai with dad, sister". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-03.
  2. "Law college student arrested". தி இந்து. 2015-08-19. http://www.thehindu.com/news/national/tamil-nadu/law-college-student-arrested/article7555885.ece. பார்த்த நாள்: 2016-04-03. 
  3. "Indefinite fast for liquor ban in Madurai enters day 2". தி இந்து. 2013-07-31. http://www.thehindu.com/news/cities/Madurai/indefinite-fast-for-liquor-ban-in-madurai-enters-day-2/article4973231.ece. பார்த்த நாள்: 2016-04-03. 
  4. Vannan, Gokul (2014-12-01). "Law Student on Kick-the-bottle Crusade for Kids". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/states/tamil_nadu/2014/12/01/Law-Student-on-Kick-the-bottle-Crusade-for-Kids/article2549445.ece. பார்த்த நாள்: 2016-04-03. 
  5. ப.திருமாவேலன் (2015-06-18). "Nandhini campaign against tasmac! | மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மருத்துவமனை முன்பு மாணவி நந்தினி பிரசாரம்!". Vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Student Nandhini's Protest for Total Prohibition on Liquor in Tamil Nadu | Vikatan TV". YouTube. 2013-07-31. பார்க்கப்பட்ட நாள் 2016-04-03.
  7. "Nandhini, female protagonist in the anti-liquor movement 1/3 | Phoenix Pengal | News7 Tamil". YouTube. 2015-08-16. பார்க்கப்பட்ட நாள் 2016-04-03.
  8. "மீனவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்: சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது". புதிய தலைமுறை. 8 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2017.
  9. "முதல்வர் எடப்பாடி வீடு முன் போராட்டம் - மாணவி நந்தினி கைது!". நக்கீரன். 8 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "குமரிக்கு போங்க.. முதல்வர் வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது!". ஒன்இந்தியா. 8 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2018.
  11. "நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி கைது". மாலை மலர். 25 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_(செயற்பாட்டாளர்)&oldid=3217892" இலிருந்து மீள்விக்கப்பட்டது