நந்தீசுரர் பூசா விதி
நந்தீசுரர் பூசா விதி (நந்தீஸ்வரர் பூஜா விதி) என்னும் நூல் நந்தீசுரர் என்னும் சித்தரால் இயற்றப்பட்டது. [1]
இந்த நூலில் மொத்தம் 12 பாடல்கள் மட்டுமே உள்ளன.
இதில் முதல் ஆறு பாடல்கள் ஓம்ஸ்ரீ கங்கு, [2] சங்வங்மங் சரவணாய [3] நம சிவய கிம் ஆம், [4] முதலான மந்திரம் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
மூச்சை வெளி விடுதலை ரேசகம் என்றும், [5] மூச்சை உள் இழுத்தலைப் பூரகம் என்றும், [6] மூச்சை உள் நிறுத்தலைக் கும்பகம் என்றும், [7] குறிப்பிட்டு ரேசகத்தில் ‘ஆம்’ என்றும், பூரகத்தில் ‘இம்’ என்றும், கும்பகத்தில் ‘உம்’ என்றும் வாய் மூக்குகளில் ஒலி உண்டாக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
சந்திர பூசைக்கு ‘யங் நங்’ என்று மந்திரம் சொல்ல வேண்டும் என்கிறது [8]
பாடல் எடுத்துக்காட்டு
தொகுபாரப்பா சனி பூசை சொல்லக் கேளு
- பண்பான வங்கென்றும் சங்கென்றும் தான்
நாரப்பா மேருவிலே குந்திக் கொண்டு
- நலமாகத் தோத்தரித்துப் பூசைசெய்நீ
வாரப்பா தூப நைவேத்யத் தோடு
- வளமாகத் தோத்தரித்துப் பானம் செய்து
ஆரப்பா வேணவரம் கேட்டுக் கொண்டே
- அப்பனே அட்சணத்தில் ஈவார் காணே [9]