நன்னெறி (நூல்)

கல்வியின் சிறப்பு

நன்னெறி ஒரு தமிழ் நீதி நூல். மக்களை நல்வழி படுத்தும் நன்னெறிகளை எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இதனை இயற்றியவர் சிவப்பிரகாசர். நாற்பது பாடல்கள் கொண்ட இந்த நூல் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நட்பு, இன்சொல் பேசுவதன் சிறப்பு, கல்வியின் மேன்மை, அறிஞர்களின் உயர்வு, பெரியோர் பெருமை, உதவிசெய்து வாழ்வதன் சிறப்பு, ஆணவம் கூடாது முதலிய நன்னெறிகளைச் சொல்கிறது.

இந்நூலின் பாடல்களைச் சிவப்பிரகாசர் கடற்கரை மணலில் எழுதப் பின் அவரின் சீடர்கள் அவற்றை ஏடுகளில் பதிவு செய்தனர் என்று இதன் முன்னுரை சொல்கிறது. இந்நூலின் பாடல்கள் அனைத்தும் மகடூஉ முன்னிலை அமைப்பில் (பெண் ஒருத்தியை அழைத்துச் சொல்வது போல) அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னெறி_(நூல்)&oldid=3278381" இலிருந்து மீள்விக்கப்பட்டது