நபகுமாரி தேவி
நபகுமாரி தேவி (Nabakumari Devi-பிறப்பு: சனவரி 1, 1920) ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டப் பேரவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் காசீபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 3வது ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
நபகுமாரி தேவி | |
---|---|
உறுப்பினர்-ஒடிசாவின் சட்டமன்றம் | |
பதவியில் 1961-1967 | |
தொகுதி | காசீப்பூர்[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
குடும்பம்
தொகுநவகுமாரி தேவி சனவரி 1, 1920-இல் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ராணா ஹதபீர் ஜங் பகதூர் மற்றும் இவரது கணவர் பெயர் ருத்ர பிரதாப் சிங்தியோ.[4]
அரசியல் வாழ்க்கை
தொகுநவகுமாரி தேவி ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் ஒருமுறை ஒடிசா சட்டப் பேரவையில் சபாநாயகராகவும் பணியாற்றினார்.[5]
1961ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக காசீப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[6] இந்த தேர்தலில் இவர் தனது நெருங்கிய போட்டியாளரான ஜர்பானி தேவியை 2158 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 3வது ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Orissa Assembly Election Results in 1961". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
- ↑ "Smt. Nabakumari Devi". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
- ↑ "Far Eastern Economic Review". October 1961. p. 398. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
- ↑ "Shri Nabakumari Devi". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
- ↑ "Shri Nabakumari Devi". odishaassembly.nic.in. Odisha Assembly. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
- ↑ "Orissa 1961". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-06-27.
- ↑ ଡକ୍ଟର ଉଦ୍ଧବ ଚରଣ ନାୟକ (2013). "୧୪". ଓଡ଼ିଶା ରାଜନୀତିର ଇତିହାସ (in ଓଡ଼ିଆ) (୩ୟ ed.). ଭୁବନେଶ୍ୱର: ଆମ ଓଡ଼ିଶା. p. ୧୩୬. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89436-54-4. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)