நபிவழி
நபிவழி அல்லது சுன்னா அல்லது சுன்னத்து என்பது இறைத்தூதர் முகம்மது அவர்களின் வாழ்க்கை மற்றும் வழிகாட்டல்களில் அடிப்படையில் முசுலிம்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற பரிந்துரைக்கப்படுபவனவாகும். இவை இசுலாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுக்கு அடுத்த நிலையில் உள்ளவை. சுன்னா என்ற சொல்லானது (سنة, Arabic: [ˈsunna], பன்மையில் سنن sunan [ˈsunan]), மூலச்சொல்லான (سن [sa-n-na]) என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் மென்மையானது மற்றும் எளிதான வழி அல்லது நேரான வழி என்பதாகும். இச்சொல்லின் நேரடிப் பொருளானது ஒழுங்குபடுத்தபட்ட பாதையைக் குறிக்கிறது. இசுலாமிய நூல்களில், சுன்னா என்பது முகம்மது அவர்களின் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டவை மற்றும் அவரால் பின்பற்ற பரிந்துரைக்கப்பட்டவை ஆகியவற்றைக் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முகம்மது அவர்களின் சரிய்யாவின் ஆசிரியராகவும், ஒரு சிறந்த முன்னுதாரமாகவும் கடைப்பிடக்கத் தகுந்தவர் என்றும் கூறுகிறது.(உசுவத்துன் ஹசனா - அழகிய முன்மாதிரி)[1]
உசாத்துணைகள்
தொகு- ↑ இசுலாகி, அமின் அகுசன் (1989 (tr:2009)). "திபரன்சசு பிட்வீன் ஹதீது அண்டு சுன்னா". மபாதி ததப்பர் இ ஹதீது (மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்): பண்டமன்டல்சு ஆபு ஹதீது இண்டர்படேசன்) (in உருது). இலாகூர்: அல் மவ்ரித்து. பார்க்கப்பட்ட நாள் 1 June 2011.
{{cite book}}
: Check date values in:|year=
(help)