நமசிவாய மாலை

நமசிவாய மாலை [1] என்னும் நூல் பாட்டியல் கூறும் சிற்றிலக்கிய வகையில் வருக்கமாலை வகையினைச் சேர்ந்தது. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். நூல் அச்சாகவில்லை. ஏட்டுப்படிவத்தில் உள்ளது. இதில் காப்புச் செய்யுளும் 100 கண்ணிகளும் உள்ளன. [கௌ], [சௌ], [தௌ] எழுத்துக்களுக்கும், [ய], [வ] வரிசையில் உள்ள எழுத்துக்களுக்கும் பாடல்கள் இல்லை.

ஒவ்வொரு பாடலும் 'நமசிவாய' என்னும் சொல்லுடன் முடிகிறது. "நமசிவாய என்பது இங்கு மந்திரமாக அல்லாமல் பெயராகவே வைக்கப்பட்டு விளியாக உள்ளது". [2]

பாடல் - எடுத்துக்காட்டு [3] தொகு

சத்தியும் சிவமும் ஆகித் தாணுமாய்ச் சகத்துக்கு எல்லாம்
முத்தியை அளிப்பாய் ஆகி முதல்வனே நமசிவாய

பிறை பணி நடையினாலை பிஞ்ஞகா அடியார்க்கு எல்லாம்
குறைவு அற வாழ்வு அளிக்கும் கொற்றவா நமணிவாய

அடிக்குறிப்பு தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 126. 
  2. மு. அருணாசலம் குறிப்பு
  3. அறுசீர்க் கண்ணிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமசிவாய_மாலை&oldid=1447753" இலிருந்து மீள்விக்கப்பட்டது